செக்ஸ் வாழ்க்கையை ஸ்பெஷலாக்க பீட்ரூட் உதவுமா... உண்மை என்ன?

Beetroot And Sexual Health: பீட்ரூட்டை அதிகம் சாப்பிட்டால் பாலியல் செயல்பாட்டில் முன்னேற்றம் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ள நிலையில், அதுகுறித்து இதில் தெளிவாக காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 12, 2024, 08:42 PM IST
  • ஆஸ்திரேலியாவில் பீட்ரூட்டுக்கு அதிக தேவை உள்ளது.
  • இந்திய மதிப்பில் ஒரு டின் பீட்ரூட் ரூ.3,500 என்ற விலையில் விற்கப்படுகிறது.
  • பீட்ரூட்டில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
செக்ஸ் வாழ்க்கையை ஸ்பெஷலாக்க பீட்ரூட் உதவுமா... உண்மை என்ன? title=

Relation Between Beetroot And Sexual Health: காய்கறி சாப்பிட சொன்னால் பலருக்கும் அது கசக்கும் எனலாம். அசைவம் சாப்பிடுபவர்கள் காய்கறிகளை பெரிதாக சட்டை செய்துகொள்ள மாட்டார்கள். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பாகற்காய், பீட்ரூட், சவ்சவ் போன்ற காய்கறிகள் பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப்படும் காய்கறிகள் எனவும் கூறலாம். ஆனால், பீட்ரூட் சமீப காலத்தில் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையாகியிருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது எனலாம். 

அதாவது, கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவின் சூப்பர்மார்க்கெட்களில் டின்னில் அடைக்கப்பட்ட பீட்ரூட்களுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது. ஒருகட்டத்தில் ஆன்லைனில் ஒரு பீட்ரூட் டின் சுமார் 65 ஆஸ்திரேலிய டாலருக்கு விற்பனையாகி உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,500 வருகிறது. அப்படி என்ன திடீரென பீட்ரூட் தட்டுப்பாடு வரும் அளவிற்கு நடந்தது என்பதை இதில் காணலாம்.

இங்கிலாந்தின் மருத்துவர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசும்போது, பீட்ரூட்டை 'காய்கறிகளின் வையாகரா' என குறிப்பிட்டு பேசியது இந்த தட்டுப்பாட்டிற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில், அது உண்மையா பீட்ரூட்டின் பின்னிருக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இதில் தொடர்ந்து பார்க்கலாம்.

மேலும் படிக்க | சுகர் அதிகமா இருக்கா? கன்ட்ரோல் செய்ய இந்த விதை பழங்கள் சாப்பிடுங்க

பீட்ரூட்டில் சராசரியை விட கூடுதலான வைட்டமின்கள், தாதுக்களும் உள்ளன. குறிப்பாக, வைட்டமிண் B, C, ஃபைபர் மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நீங்கள் பீட்ரூட்டை எந்த வகையில் அதாவது ஜூஸாக, சிப்ஸாக சாப்பிட்டாலும் அதன் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் அப்படியேதான் இருக்கும். ரோமானியர்கள் பீட்ரூட்டையும், அதன் ஜூஸையும் பாலுணர்வை தூண்டும் காய்கறியாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இருப்பினும், பீட்ரூட் உங்கள் பாலியல் வாழ்வை சிறப்பானதாக மாற்றும் என்பதை கூறுவதற்கு குறைவான அறிவியல் ஆதாரங்களே உள்ளன. அதாவது, முழுமையாக அப்படியில்லை என மறுக்கவும் முடியாது. இருப்பினும், பீட்ரூட்டை இந்த நோக்கில் ஆய்வு வந்திருப்பது குறைவாகவே இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், பீட்ரூட் எப்படி பாலியல் விஷயங்களில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை தொடர்ந்து காணலாம். 

பீட்ரூட்டை சாப்பிடும்போது, பாக்டீரியா மற்றும் நொதிகள் சேர்ந்து பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டை (Nitrate), நைட்ரைட்டாக (Nitrite) மாற்றும், பின்னர் அது நைட்ரிக் ஆக்ஸைடாக மாற்றம் அடையும். நைட்ரிக் ஆக்ஸைட் ரத்த குழாய்களை விரிவுப்படுத்த உதவும், இதன்மூலம் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இந்த நைட்ரிக் அமிலம் கீரையிலும், பீட்ரூட்டிலும் அதிகம் இருக்கிறது. 

நைட்ரிக் ஆக்சைடு உடலுறவுக்கு முன்னும் பின்னும் ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதிலும், ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோனை ஆதரிப்பதாகவும் கருதப்படுகிறது. ரத்த ஓட்டத்தை பீட்ரூட் மேம்படுத்தும். இதயம் மற்றும் ரத்த குழாய்களை விரிவடைய பயனளிக்கும். இது ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் செயல்பாட்டை அதிகரிக்க உதவலாம்.

எனவே, பீட்ரூட்டுக்கும் உடலுறவு செயல்பாட்டுக்கும் இடையே ஓரளவு தொடர்பு இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் அது உங்களது பாலியல் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றும் என்பது ஏற்கமுடியாததாகும். 

மேலும் படிக்க | சாப்பிட்ட பின் 10 நிமிட வாக்கிங்... உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News