நீரழிவு நோய்க்கு மாமருந்தாகும் ‘சில’ பச்சை காய்கறிகள் இவை தான்!

Diabetes Diet: சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை சிறிது கட்டுப்படுத்தலாம் என்றாலும், சரியான உணவுமுறை மூலம் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 15, 2022, 04:49 PM IST
  • சரியான உணவுமுறை மூலம் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
  • கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ள காய்கறிகள்.
  • கீரை வகைகள் எல்லாமே சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
நீரழிவு நோய்க்கு மாமருந்தாகும் ‘சில’ பச்சை காய்கறிகள் இவை தான்! title=

தற்போதைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லை என்றால், அதுவே பல நோய்களுக்குக் காரணமாகிவிடும். நீரிழிவு நோயில், சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் அடிக்கடி அதை பரிசோதிக்க வேண்டும். 

சர்க்கரை நோயாளிகள் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயை சிறிது கட்டுப்படுத்தலாம் என்றாலும், சரியான உணவுமுறை மூலம் சர்க்கரையின் அளவை எளிதில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அதோடு மருந்தின் அளவையும் போகப் போக குறைத்து விடலாம். தினசரி உணவில், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில ஆரோக்கியமான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த காய்கறிகளை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும் என்பதைப் பார்ப்போம்.

பாகற்காய்

பாகற்காய்  ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதில் சிறந்த காய்கறி எனலாம். அதன் ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சிறந்த வகையில் கட்டுப்படுத்தப்படும்.

வெந்தயக் கீரை

கீரை வகைகள் எல்லாமே சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் என்றாலும், வெந்தயக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. இந்தக் கீரையில் உள்ள லேசான கசப்பு சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து நீரிழிவை குணமாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | அளவிற்கு மிஞ்சிய கீரை சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

பச்சை இலை காய்கறிகள்

முட்டை கோஸ் போன்ற பச்சை இலைக் காய்கறியில் நார்ச்சத்து அதிகமாகவும், சர்க்கரையின் அளவு  மிகவும் குறைவாகவும் உள்ளது. எனவே இதனை நீரிழிவு நோயின் பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெண்டைக்காய்

இரவில் தூங்கும் போது வெண்டைக்காயை இரண்டாகக் கீறி, அதனை ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அதை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரை அளவை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.

சுரைக்காய்

சுரைக்காயின் சாறு எடுத்து அதை தொடர்ந்து காலையில் குடித்து வர இன்சுலின் அளவு அதிகரித்து, நீரிழிவு நோய் விரைவில் கட்டுக்குள் வரும்.

பூசணிக்காய்

பூசணிக்காய் இனிப்பு சுவையுடையது என்றாலும் அவற்றில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. எனவே இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும்.

(பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | நொறுக்குத் தீனி சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? உண்மை என்ன? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News