SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கி

SBI Fixed Deposit Interest Rates: புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 15, 2024, 03:09 PM IST
  • SBI வாடிக்கையாளரா நீங்கள்?
  • உங்களுக்கு ஒரு நல்ல செய்தி.
  • எஸ்பிஐ சில கால அளவுகளுக்கான எஃப்டி விகிதங்களை இன்று முதல், அதாவது 15 மே 2024 முதல் உயர்த்தியுள்ளது.
SBI வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட் செய்தி: FD வட்டி விகிதங்களை அதிகரித்தது வங்கி title=

SBI Fixed Deposit Interest Rates: பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி!! எஸ்பிஐ சில கால அளவுகளுக்கான எஃப்டி விகிதங்களை இன்று முதல், அதாவது 15 மே 2024 முதல் உயர்த்தியுள்ளது. ரூ.2 கோடி வரையிலான சில்லறை டெபாசிட்கள் மற்றும் ரூ.2 கோடிக்கு மேல் உள்ள மொத்த டெபாசிட்கள் மீது இந்த உயர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய FD விகிதங்கள் இன்று மே 15, 2024 முதல் அமலுக்கு வருவதாக வங்கியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எஸ்பிஐ 46 முதல் 179 நாட்கள், 180 முதல் 210 நாட்கள், மற்றும் 211 ஒரு வருடத்திற்கும் குறைவான கால அளவு வரை வட்டி விகிதங்களை 25-75 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) உயர்த்தியுள்ளது. பொதுத்துறை வங்கியான SBI, கடைசியாக டிசம்பர் 27, 2023 அன்று பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது.

SBI -இன் சமீபத்திய FD விகிதங்களை இங்கே காணலாம்:

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) டெபாசிட் காலத்தின் அடிப்படையில் மாறுபட்ட பிக்சட் டெபாசிட் (FD) வட்டி விகிதங்களை வழங்குகிறது.

- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான குறுகிய கால வைப்புகளுக்கு, வட்டி விகிதம் 3.50% ஆகும். 
- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு, விகிதம் 5.50% ஆக அதிகரிக்கிறது. 
- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை, வட்டி விகிதம் 6.00%. 
- 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான வைப்புகளுக்கு 6.25% வட்டி விகிதம் கிடைக்கும். 
- 1 வருடம் முதல் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கு, வட்டி விகிதம் 6.80% ஆக இருக்கும். 
- 2 ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான விகிதம் 7.00% ஆகும். 
-  3 ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கு, வட்டி விகிதம் 6.75% ஆக உள்ளது.
-  இறுதியாக, ஐந்து ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால வைப்புகளுக்கு, வட்டி விகிதம் 6.50% ஆக இருக்கும்.

மேலும் படிக்க | PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!

மூத்த குடிமக்களுக்கான எஸ்பிஐ எஃப்டி விகிதங்கள் (SBI FD Rates for Senior Citizens)

பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ), மூத்த குடிமக்களுக்கு அவர்களின் எஃப்டி கணக்கில் கூடுதலாக 50 அடிப்படைப் புள்ளிகள் (பிபிஎஸ்) கிடைக்கின்றன. சமீபத்திய வட்டி விகித (Interest Rates) உயர்வைத் தொடர்ந்து, பல்வேறு கால அளவிற்கு, SBI மூத்த குடிமக்களுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் பற்றி இங்கே காணலாம். 

- 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 4%

- 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை 6.00%

- 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.5%

- 211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு 6.75%

- 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான காலத்திற்கு 7.30%

- 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.50%

- 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 7.25

- 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை 7.5%

மேலும் படிக்க | Gold Loan: குறைந்த வட்டியில் நகை கடன்களை வழங்கும் ‘சில’ வங்கிகள்... EMI விபரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News