ஆதார் அட்டை முதல் வருமான வரி வரை... நீங்கள் முடிக்க வேண்டிய 7 முக்கிய வேலைகள்!

உங்கள் நிதி ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சில முக்கியமான வேலைகளின் காலக்கெடு 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிவடைகிறது. இலவச ஆதார் புதுப்பித்தல் முதல் வருமான வரி வரையிலான காலக்கெடுவும் இதில் அடங்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 5, 2024, 03:32 PM IST
ஆதார் அட்டை முதல்  வருமான வரி வரை... நீங்கள் முடிக்க வேண்டிய 7 முக்கிய வேலைகள்! title=

இலவச ஆதார் புதுப்பித்தல் (Free Aadhaar Update) முதல் வருமான வரி விதிகள்  (Income Tax Rules) மற்றும் டிமேட் கணக்கு பரிந்துரை வரை, பணம் தொடர்பான பல பணிகளுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தொடர்பான இப்பணிகளை விரைந்து முடிப்பது சிக்கல்களை தவிர்க்க உதவும். இந்தப் பணிகளை நீங்கள் நிறைவு செய்யவில்லை என்றால், அபராதம் மற்றும் பிற கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருக்கும்.

இலவச ஆதார் புதுப்பிப்பு

உங்கள் ஆதார் அட்டை (Aadhaar Card) 10 ஆண்டுகள் பழமையானதாக இருந்தால், அதை நீங்கள் புதுப்பிக்கலாம். மார்ச் 14, 2024 வரை ஆதாரை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை அரசு வழங்கியுள்ளது. myAadhaar என்னும் போர்ட்டலில் நீங்கள் ஆதாரை இலவசமாக புதுப்பிக்கலாம். இது தவிர,  உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள CSC மையத்திற்குச் சென்று ஆதார் அட்டையை கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாகப் புதுப்பிக்கலாம்.

வீட்டு வாடகைக்கான டிடிஎஸ்: 

நீங்கள் ரூ. 50,000 அல்லது அதற்கு மேல் மாத வீட்டு வாடகை செலுத்தி வரும் நிலையில், 2023-24 நிதியாண்டில் டிடிஎஸ் கழிக்கப்படவில்லை என்றால், மார்ச் 31, 2024 தேதிக்குள் வாடகை செலுத்தியதற்கான ஆவணங்களை வழங்கி TDS-ஐக் கழிக்கவும்.

வரிச் சேமிப்ப்பிற்கான முதலீட்டுத் திட்டம்

2023-24 நிதியாண்டில் நீங்கள் வரிச் சேமிப்பைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அனைத்து வரிச் சேமிப்பு முதலீடுகளும் (Tax Saving Investment) மார்ச் 31, 2024க்கு முன் செய்யப்பட வேண்டும். பழைய வரி முறையின் கீழ் இந்த விலக்குகளை நீங்கள் கோரலாம்.

மேலும் படிக்க | Tax Evasion Penalty: தெரியாமகூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க... அபராதம் முழி பிதுங்க வைக்கும்!!

வங்கி நிலையான வைப்பு முதலீட்டிற்கான காலக்கெடு

பல வங்கிகள் சிறப்பு நிலையான வைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன, அதன் காலக்கெடு இந்த ஆண்டு முடிவடைகிறது. HDFC மூத்த குடிமக்கள் பராமரிப்பு FDக்கான காலக்கெடு ஜனவரி 10 ஆகும். இதேபோல், SBI WeCare FD திட்டத்தின் கடைசி காலக்கெடு 31 மார்ச் 2024 ஆகும்.

டிமேட் கணக்கில் நாமினி பெயரை சேர்த்தல்

நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கும் நிலையில், டிமேட் கணக்கில் நாமினியைச் சேர்ப்பதற்கான  (Demat Account Nomination) காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30, 2024க்குள் டிமேட் கணக்கில் நாமினி சேர்க்கப்பட வேண்டும். இது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் வர்த்தகம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு

ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 31 ஜூலை 2024 என வழங்கப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கு, அனைத்து வரி செலுத்துவோரும் ஜூலை 31க்கு முன் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதற்காகITR-1, ITR-2 மற்றும் ITR-4  என படிவங்களை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

தங்கப் பத்திரம் முதலீட்டு திட்டம்

தங்கத்தில் முதலீடு செய்வதற்காக இந்திய ரிசர்வ் வங்கியால் (ஆர்பிஐ) தங்கப் பத்திரங்கள் விற்பனை திட்டம் (Sovereign Gold Bond Scheme) தொடங்கப்பட்டுள்ளது. தங்கப் பத்திரங்களின் அடுத்த தொகுப்பு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை திறக்கப்படும். முதலீட்டாளர்கள் இந்தக் காலக்கெடுவைத் தவறவிட்டால், அடுத்த நிதியாண்டில் வரக்கூடிய அடுத்த தொகுபிற்காக அவர்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

மேலும் படிக்க | இன்று முன் அதிரடியாய் குறையும் விமான கட்டணங்கள்... பயணிகள் ஹாப்பி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News