வெளிநாட்டு இசையை ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டு கடும் உழைப்பு தண்டனை! வீடியோ வைரல்

Google Trending Video Of Teenagers Enquiry: வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை தொலைத்த டீன் ஏஜ் இளைஞர்கள்! கையில் விலங்குடன் விசாரணை மன்றத்தில் சிறுவர்கள் வைரல் வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 20, 2024, 03:50 PM IST
  • வெளிநாட்டு இசையை ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டு கடும் உழைப்பு தண்டனை
  • கையில் விலங்குடன் விசாரணை மன்றத்தில் சிறுவர்கள் வைரல் வீடியோ
  • அண்டை நாட்டுடன் கடும் விரோதத்தை கடைபிடிக்கும் நாட்டின் கண்டிப்பு
வெளிநாட்டு இசையை ரசித்த சிறுவர்களுக்கு 12 ஆண்டு கடும் உழைப்பு தண்டனை! வீடியோ வைரல் title=

16 வயதே நிரம்பிய இரண்டு சிறுவர்கள் தென் கொரிய பாப் இசை மற்றும் சினிமாவைக் கண்டு ரசித்ததற்காக தண்டிக்கப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்த குற்றத்துக்காக2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வைரலாகும் வீடியோவில் ஓர் அரைவட்ட திறந்தவெளி அரங்கில் பழுப்பு நிற உடையணிந்த 2 சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். அரங்கில் 1000 சிறார்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருக்கின்றனர். இதுவே அந்த வீடியோ கரோனா காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

அப்போது ஒருவர் தண்டனையை அறிவிக்கிறார். அவர்கள் இருவரும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை அழித்துக் கொண்டார்கள் என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது ராய்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

வட கொரிய அதிகாரிகள், இரு சிறுவர்களுக்கும், 12 வருட கடின உழைப்பு தண்டனையை விதிப்பதை காண்டும், ஆயிரக்கணக்கில் கூடியிருக்கும் சிறுவர்களின் மத்தியில் சலசலப்பு கூட இல்லை.

மேலும் படிக்க | மது அருந்துவதை நிறுத்தினால் வரும் பக்கவிளைவுகள்! இதுக்கு தான் குடிமகன்கள் பயப்படறாங்களோ?

வீடியோவில் இரண்டு மாணவர்கள் கைவிலங்கிடப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கலாம். இந்த விசாரணையை கிட்டத்தட்ட 1,000 மாணவர்கள் ஒரு ஆம்பிதியேட்டரில் கவனித்தனர். தென் கொரிய பாப் கலாச்சாரம், இசை மற்றும் பொழுதுபோக்கை ரசிப்பவர்களை தண்டிப்பதற்காக வட கொரியா இதுபோன்ற மோசமான தண்டனைகளை வழங்குவது ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.

\தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் இசை வீடியோக்களைப் பார்த்ததால் கூட, வட கொரியாவில் கடும் தண்டனை விதிக்கப்படும் என்பதை காட்டும் இந்த வீடியோவை சவுத் அண்ட் நார்த் டெவலப்மென்ட் (SAND) இன்ஸ்டிடியூட்டின் சமீபத்திய காட்சிகள் காட்டுகின்றன.

மேலும் படிக்க | Ramar Photo: அயோத்தி ராமரின் முதல் புகைப்படம்.. கருவறையில் வைக்கப்பட்ட சிலை - கண்கொள்ளாக் காட்சி

வட கொரியாவில், கிம் ஜாங் உன்னின் செல்வாக்கை பாதுகாக்கும் வகையில் கடும் நடவடிக்கைகளை அந்நாடு தொடர்ந்து எடுத்துவருகிறது. அதிலும் அண்டை நாடான தென் கொரியாவை மக்கள் மனதிலும் நினைத்துவிடக்கூடாது எனபதற்காக, சொந்த நாட்டு மக்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்வது நீண்டகாலமாக தொடர்கிறது.

வட கொரியா தனது எல்லைகளுக்குள் தகவல் ஓட்டம் மற்றும் தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் உட்பட வெளிநாட்டு ஊடகங்களை அணுகுவதை இறுக்கமாக கட்டுப்படுத்துகிறது. தென் கொரிய கலாச்சாரத்தை பின்பற்றுபவர்களை தண்டிப்பதன் மூலம், தகவல்களில் ஏகபோகத்தை தக்க வைத்துக் கொள்ளவும், தனது நாட்டு குடிமக்களின் உலகக் கண்ணோட்டத்தை வடிவமைக்கவும் அரசாங்கம் முயல்கிறது என்ற குற்ற்ச்சாட்டுகளை நிரூபிக்கும் இதுபோன்ற தகவல்கள் அவ்வப்போது கசிந்து, உலகின் பார்வைக்கு வந்துவிடுகிறது.  

தென் கொரிய திரைப்படங்கள், இசை மற்றும் இசை வீடியோக்களை மூன்று மாதங்களுக்குப் பார்த்தது மற்றும் மற்றவர்களுடன் அவற்றை பகிர்ந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்னர் மாணவர்கள் தண்டனை பெற்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | Bizarre Video: இப்படியொரு வளைகாப்பை யாரும் பாத்திருக்கவே முடியாது! அதிர வைக்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News