துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!

Dubai Unlocked: துபாயில் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர்களாக இருக்கும் பாகிஸ்தானியர்களின் முதலீடுகள் அதிர்ச்சியளிக்கின்றன 

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 07:16 AM IST
  • துபாய் அன்லாக்ட்
  • பாகிஸ்தானின் பணக்கார முகம்!
  • அதிர்ச்சியில் உறையும் பாகிஸ்தானியர்கள்
துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்! title=

பணமில்லாத காரணத்தால் பொருளாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் காரணிகள் என்ற பட்டியல் மிகவும் பெரிது என்றாலும், அதில் தற்போது துபாய் அன்லாக்ட் (Dubai Unlocked) என்ற பெயரும் இணைந்துவிட்டது. அடிப்படை செலவுகளுக்குக்கூட பணம் இல்லாமல் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டில், உயர்மட்டத்தை சேர்ந்தவர்கள், துபாயில் பில்லியன் கணக்கான சொத்துக்களை வாங்கியுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஏழை மக்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவை சாப்பிட முடியாத நிலையில் இருப்பதும், அதிகரித்து வரும் பணவீக்கத்தால் கலக்கமடைந்த மக்கள் கிளர்ச்சியில் இறங்கி உள்ளனர் என்ற செய்திகள் வந்திருக்கும் பத்திரிகையிலேயே துபாய் அன்லாக்ட் என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது நகைமுரணாக உள்ளது.

ஏனென்றால், பாகிஸ்தான் மக்கள் ஏழைகளாக இருக்கலாம், நாடு பொருளாதார ரீதியில் அதல பாதளத்திற்குள் செல்லக்கூடும் என்றும் கூறப்படும் நிலையில், கூறியுள்ளது. இந்த ஏழை நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என உயர்மட்ட அதிகாரிகள், துபாயில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பதை துபாய் லீக்ஸ் வெளிப்படுத்துகிறது.

கணிசமான எண்ணிக்கையிலான முக்கிய பாகிஸ்தானியர்கள் துபாயின் ஆடம்பரமான பகுதியில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். OCCRP இன் 'துபாய் அன்லாக்டு' முயற்சியில் கண்டறியப்பட்ட விவரங்களின் ஒரு பகுதி அறிக்கையிலிருந்து கசிந்த தகவல்கள் இவை. அரசியல், ராணுவம், வங்கி மற்றும் நிர்வாகத்துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனிநபர்களின் சொத்து தொடர்பான விவரங்களை துபாய் அன்லாக்ட் (Dubai Unlocked) அறிக்கை அம்பலப்படுத்துகிறது.

பாகிஸ்தானியர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 23,000 சொத்துக்கள் இருப்பதாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த “துபாய் அன்லாக்டு” முயற்சியை உலகளாவிய ஊடகங்கள் நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானின் பிரச்சனைகளுக்கான ஆணிவேர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  

மேலும் படிக்க | தவறை சுட்டிக்காட்டியவரை பதவி விலகச் சொன்ன நேபாளம்! பொருளாதார ஆலோசகர் சிரஞ்சீவி நேபாள் ராஜினாமா!

துபாயில் உள்ள லட்சக்கணக்கான சொத்துகளின் உரிமையாளர்கள் யார் என்ற பின்புலத்தை ஆய்வு செய்யும் விசாரணையின் முக்கிய தகவல்கள், மேம்பட்ட பாதுகாப்பு ஆய்வுகள் மையம் (C4ADS) தலைமையில், சர்வதேச ஊடக சேனல்களுக்கு கிடைத்துள்ளது.

துபாயில் சொத்து வைத்திருக்கும் பாகிஸ்தான் பிரமுகர்கள்

சொத்துக் கசிவுகளில் அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானியர்களில், ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ஹுசைன் நவாஸ் ஷெரீப், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் மனைவி, ஷர்ஜீல் மேமன், செனட்டர் பைசல் வாவ்டா மற்றும் சிந்து மற்றும் பலுசிஸ்தான் சட்டசபைகளைச் சேர்ந்த ஏராளமான சட்டமன்ற உறுப்பினர்களின் குடும்பத்தினர் அடங்குவார்கள்.  

இந்த பட்டியலில் மறைந்த ஜெனரல் பர்வேஸ் முஷாரப், முன்னாள் பிரதமர் ஷௌகத் அஜீஸ், ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல்கள், உயர்மட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், பாகிஸ்தான் தூதர், விஞ்ஞானி ஒருவர் என பல பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  

சொத்து போர்ட்ஃபோலியோ
ஆடம்பரமான வில்லாக்கள் வரை ஸ்டுடியோ அடுக்குமாடி குடியிருப்புகள் என பலவிதமான சொத்துக்கள் வைத்திருப்பவர்களில், உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் மனைவியின் பெயர் குறிப்பாக சொல்லப்படுவதற்குக் காரணம், அவருக்கு சொந்தமான துபாயில் உள்ள ஆடம்பர பங்களாவைப் பற்றி தேர்தல் வேட்புமனு தாக்கலில் குறிப்பிடப்படவில்லை என்பது தான். 

மேலும், பணமோசடி விவகாரத்தில் பெயர் அடிபடும் அல்தாஃப் கானானி நெட்வொர்க், குற்றச் செயல்களில் ஈடுபட்ட மருத்துவர் ஹமீத் முக்தார் ஷா போன்ற தனிநபர்களுக்கும் துபாயில் சொத்து இருப்பதை இந்த துபாய் அன்லாக்ட் வெளிப்படுத்துகிறது .

துபாய் மெரினா, எமிரேட்ஸ் ஹில்ஸ் மற்றும் பாம் ஜுமேரா போன்ற முக்கியமான இடங்களில்,  காம்பாக்ட் ஸ்டுடியோ, அடுக்குமாடி குடியிருப்புகள் முதல் ஆறு படுக்கையறைகள் கொண்ட ஆடம்பர வில்லாக்கள் வரையிலான சொத்துக்கள் இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன.  

மேலும் படிக்க | PoK: பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் வலுக்கும் போராட்டம்... திணறும் பாகிஸ்தான்..!!

கசிந்த தரவுகளில், பாகிஸ்தானியர்களின் 23,000 க்கும் மேற்பட்ட சொத்துக்கள், பாகிஸ்தானியர்களின் கடல்சார் ரியல் எஸ்டேட் செல்வம் பற்றிய விவரங்களை வழங்குகிறது. இந்தத் தரவுகள் நிதி முறைகேட்டைக் குறிக்கவில்லை என்றாலும், அதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதை யாரும் மறுக்கமுடியாது. அரசியல்வாதிகள், தங்கள் தேர்தல் பிரமாணபத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிடும்போது இந்த சொத்து குறித்த விவரங்களை ஏன் குறிப்பிடவில்லை என்ற ஒரு கேள்வியே போதும். 

வரி ஏய்ப்பை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு முக்கிய முன்னேற்றமாக இது இருக்கும் என பாக்கிஸ்தானின் ஃபெடரல் போர்டு ஆஃப் ரெவின்யூ (FBR) கருதுகிறது.  இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மீட்டெடுப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்,  துபாயில் இருந்து, துபாய் அன்லாக்ட் (Dubai Unlocked)  தொடர்பான கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. 

பாகிஸ்தானின் 17,000 பணக்காரர்களின் மொத்தம் 23,000 சொத்துக்கள் துபாயில் உள்ளன. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு $12.5 பில்லியன் (சுமார் 34.5 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய்) என்பதைவிட அதிகமாக இருக்கும். தற்போது பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பில் 22 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானின் கடன் சுமை 128 பில்லியன் டாலர்கள். வட்டியை செலுத்தவே கடன் வாங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் நாட்டின் ஏழை மக்கள்,  துபாய் அன்லாக்ட் தொடர்பான அதிர்ச்சியை, போராட்டமாக வெளிப்படுத்தக்கூடும். 

மேலும் படிக்க | பொருளாதரத்தை மீட்டெடுக்க தனியார்மயமாக்கல் கொள்கையை கையிலெடுத்த பாகிஸ்தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News