உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்!

Smartphone Scam Alert: ஸ்மார்ட்போன்களில் நாம் தெரியாமல் செய்யும் சில தவறுகள் நமது வங்கியில் உள்ள பணத்திற்கு ஆபத்துகளை விளைவிக்கலாம். ஜாக்கிரதை!   

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2024, 07:51 AM IST
  • மோசடிகள் பல்வேறு முறைகளில் நடைபெறுகிறது.
  • ஆன்லைன் மோசடி அதிகரித்துள்ளது.
  • மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.
உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த தவறுகளை செய்ய வேண்டாம்! title=

Smartphone Scam: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்றைய உலகில் அனைவரது கையிலும் ஒரு ஸ்மார்ட்போன் உள்ளது. அந்த அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.  இது ஒரு புறம் தகவல் தொடர்பிற்கு எளிதாக இருந்தாலும், மறுபுறம் நிறைய ஆபத்துகளும் நிறைந்துள்ளது.  மோசடி செய்பவர்களும் மக்களை ஏமாற்ற, தினசரி பல்வேறு புதிய யுக்திகளை கையாளுகின்றனர். இவற்றை தெரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டால் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். மேலும் நமது வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் நண்பர்களுக்கும் இதனை தெரிவிக்கலாம். 

மேலும் படிக்க | 2024 ஜனவரியில் இத்தனை லட்சம் பைக்குகள் விற்பனையா... எந்த நிறுவனம் டாப்?

தினசரி காலையில் எழுந்தது தொடங்கி, இரவு தூங்கும் வரை ஸ்மார்ட்போனை கையுடன் வைத்து கொண்டு பயன்படுத்தி வருகிறோம்.  தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர வளர பல்வேறு அம்சங்கள் நம் கைக்குள் வந்துவிட்டன.  தற்போது விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்கள் புதிய அம்சங்கள் மற்றும் அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. இது பயனர்களின் பல தேவைகளை எளிதாக்குகிறது. புகைப்படம் எடுக்க முன்பு போல் லட்சங்கள் கொடுத்து கேமரா வாங்க வேண்டியது இல்லை, ஸ்மார்ட்போனிலேயே சிறந்த தரத்தில் படங்களை எடுத்து கொள்ள முடியும்.  அதே போல ஆன்லைன் கேம்களும் அதிக அளவில் பிரபலமடைந்து வருகின்றன.

இது போன்ற தேவைகளுக்காக அதிக ஆப்ஷன் கொண்ட விலை அதிகமுள்ள ஸ்மார்ட்போன்களை வாங்க விரும்புகிறார்கள். அதே சமயம், நாள் முழுக்க ஸ்மார்ட்போனின் தேவை உள்ளவர்கள் நீண்ட நேரம் பயன்படுத்தும் வகையில் நல்ல பேட்டரி லைஃப் கொண்ட போனை வாங்க விரும்புகிறார்கள். ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஒவ்வொரு பயனர்களின் தேவையை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன்களை தயாரிக்கின்றன.  இன்றைய உலகில் தற்போது தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறி வருகிறது. ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய அம்சங்களைக் கொண்ட அத்தகைய போன்களை சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருகின்றன. 

முன்பு நடைபெறும் மோசடிகளை தாண்டி இன்றைய உலகில் டிஜிட்டல் முறையில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகிறது. கேம்களை வைத்து குழந்தைகளிடமும், பெண்களை வைத்து பெரியவர்களிடமும் மோசடிகள் நடைபெறுகிறது. மோசடி செய்பவர்களும் ஏமாற்றுவதற்கு அவர்களை பயன்படுத்தி கொள்கின்றனர். அதிகமான ஆன்லைன் மோசடி ஸ்மார்ட்போன்களின் மூலம் நடைபெறுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பின்வரும் சில குறைப்புகளை பின்பற்றி, இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் ஆன்லைன் மோசடிக்கு ஆளாகாமல் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

வங்கி மூலம் மோசடி

பல முறை ஹேக்கர்கள் நம்மை அழைத்து, வங்கியின் ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் போல பேசி சில ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய சொல்கின்றனர். இதன் மூலம் நமது தகவல்கள் திருடப்பட்டு பணம் இழக்கும் அபாயமும் ஏற்படலாம்.  இந்நிலையில், உங்களுக்கு யாராவது இப்படி போன் செய்து இதைச் செய்யச் சொன்னால் உடனே சைபர் கிரைமில் புகார் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் பணத்தையும், மற்றவர்களின் பணத்தையும் பாதுகாக்க முடியும்.  இதே போல, எஸ்எம்எஸ் மூலம் லின்குகளை அனுப்பி அதன் மூலமும் மோசடிகள் நடைபெறுகிறது.  தெரியாத நம்பர்களின் இருந்து வரும் இதுபோன்ற இணைப்பைக் கிளிக் செய்யாதீர்கள். இதன் மூலமும் மோசடிகள் நடைபெறுகிறது.

மேலும் படிக்க | லேப்டாப்பில் அதிக தூசியா? சுத்தம் செய்யும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News