அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. BSNL அசத்தல் திட்டம் அறிமுகம்

ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி கொடுக்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 17, 2024, 04:36 PM IST
  • பிஎஸ்என்எல் ரூ 1499 ப்ரீபெய்ட் திட்டம்.
  • இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
  • இதற்கான மாதாந்திர செலவு ரூ.99 ஆகும்.
அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டாம்.. BSNL அசத்தல் திட்டம் அறிமுகம் title=

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம்: அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நாட்டின் நான்காவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ-ஏர்டெல் உடன் ஒப்பிடும்போது குறைவான பயனர்கள் இருந்தாலும், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் கொண்டு வருகிறது. அதுவும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை கம்மி விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

அதேபோல் பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி (BSNL 4G Services) சேவையை வருகிற ஏப்ரல் மாதம் முதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி கொடுக்கும் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

மேலும் படிக்க | Mobile Tracking: திருடிய மொபைல் சுவிட்ச் ஆப் ஆனாலும் டிராக் செய்யலாம் - கூகுள் மெகா அப்டேட்

இந்த ரீசார்ஜ் பிளான் (Recharge Plans) மூலம் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் டென்ஷன் இனி முடிந்துவிட்டது, பிஎஸ்என்எல் (Bharat Sanchar Nigam Limited) இன் இந்த திட்டத்தில் நீங்கள் 365 நாட்கள் வேலிடிட்டியை பெறுவீர்கள். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று தான் கூற வேண்டும். அவ்வளவு கவர்ச்சிகரமான திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தில், உங்களுக்கு வரம்பற்ற இணையம் மற்றும் வரம்பற்ற அழைப்பு வழங்கப்படும். 

இந்நிலையில் நீங்களும் பிஎஸ்என்எல் இன் வாடிக்கையாளராக இருந்து, நீண்ட வேலிடிட்டியுடன் கூடிய நல்ல திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்த திட்டத்தில், 82 நாட்களுக்கு வரம்பற்ற வேலிடிட்டியைப் பெறுவீர்கள். மேலும், 1.5 GB டேட்டாவும் தினசரி வழங்கப்படும். இதன் விலை ரூ. 485 ஆகும். இதனுடன், இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் பேக்குகள் வழங்கப்படுகின்றன. மேலும் சில சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் 365 வேலிடிட்டி திட்டம் | BSNL 365 Validity Recharge Plan Detail :
பிஎஸ்என்எல் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 1999 Plan Details) 365 நாட்கள் வேலிடிட்டி பெறுவீர்கள். மேலும் இந்த திட்டத்தில் 600ஜிபி லம்ப்சம் டேட்டா வழங்கப்படும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படும். இதுதவிர லோக்துன் கன்டென்ட், ஈராஸ் நவ் எண்டர்டெயின்மெண்ட் சப்ஸ்கிரிப்சன் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ 1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் (BSNL Rs 1499 Plan Details) அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. முந்தைய திட்டங்களை போலவே 24 ஜிபி டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கான மாதாந்திர செலவு ரூ.99 மட்டும் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.999 ரீச்சார்ஜ் கொண்ட திட்டத்தில் (BSNL Rs 999 Plan Details) 200 நாட்களுக்குப் பதிலாக 215 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2 மாதங்களுக்கு இலவச PRBT இன் பலனையும் பெறலாம், இருப்பினும், இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு டேட்டா மற்றும் SMS வசதிகளைப் பெறுவதில்லை. நீண்ட நேரம் அழைப்பதன் பலனை மட்டுமே நீங்கள் விரும்பினால், இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் படிக்க | BSNL Recharge Plans: பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி... இனி வரம்பற்ற டேட்டா கிடையாது - இந்த பிளானில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News