சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடி

Amazon The Great Summer Sale 2024: அமேசான் நிறுவனம் கோடை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல பொருள்களின் மீது அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 25, 2024, 04:56 PM IST
  • அமேசான் கோடை காலத்தில் பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது.
  • இந்த விற்பனையின் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
  • பல தயாரிப்புகளின் மீது அதிரடி தள்ளுபடியை அமேசான் வழங்க உள்ளது.
சம்மரில் குளு குளு ஆப்பர்... பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடி title=

Amazon The Great Summer Sale 2024: அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் பல தள்ளுபடிகளையும், ஆப்பர்களையும் அள்ளிவீசுவார்கள். அதாவது, அந்தந்த சீசனில் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து இந்த விற்பனைகள் நடைபெறும். இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் தள்ளுபடிகளை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

குடியரசு தினம், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்பர்களை அறிவிப்பார்கள். அந்த வகையில், தற்போதைய கோடை காலத்தை முன்னிட்டு அமேசான் ஒரு பிரத்யேக தள்ளுபடி விற்பனையை தொடங்க உள்ளது. அதுகுறித்து அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அதுகுறித்து இதுவரை கசிந்துள்ள தகவல்களை இங்கு காணலாம். குறிப்பாக, இந்த தள்ளுபடி விற்பனையில் எந்தெந்த பொருள்களின் விலைகள் குறையலாம் என்பதையும் இதை காணலாம். 

எந்த பொருள்களுக்கு தள்ளுபடி?

அமேசானின் The Great Summer Sale என்ற விற்பனையின் அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.. இருப்பினும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. இந்த விற்பனையில் பல நிறுவனங்களின் தயாரிப்புகள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். கோடை காலம் என்பதால் பிரிட்ஜ், ஏசி, ஏர் கூலர் ஆகியவை மட்டுமின்றி ஸ்மார்ட்போன், லேப்டாப் ஆகியவற்றிலும் விலை குறைப்பு இருக்கும் என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க |  செகண்ட் ஹேண்ட் கார் விற்பனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்! இதை நோட் பண்ணுங்க

அமேசான் நிறுவனம் வெளியிட்ட தகவல்களின்படி, எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு சதவீதம் தள்ளுபடி இருக்கும் என்பதை இதில் காணலாம். ஸ்மார்ட்போன் மற்றும் அதன் உபகரணங்கள், லேப்டாப் ஆகியவற்றுக்கு 40 சதவீதமும், ஸ்மார்ட்வாட்ச் மற்றும் டேப்லெட்கள் ஆகியவற்றுக்கு 70 சதவீதமும், ஹெட்போன்கள் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களுக்கு 75 சதவீதமும் தள்ளுபடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சமையல் உபகரணங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருள்களுக்கு 70 சதவீதமும், உயர் ரக டிவிகள் 65 சதவீதமும், அலெக்ஸா மற்றும் ஃபையர் டிவி சாதனங்கள் 45 சதவீதமும், பிரிட்ஜ் மற்றும் ஏசி 55 சதவீதமும் தள்ளுபடி விலையில் கிடைக்கும். டிவிகளை வட்டியில்லா மாதத் தவணையில் நீங்கள் பெறலாம். 

அமேசானின் கூடுதல் ஆப்பர்கள்

இந்த விற்பனை மட்டுமின்றி மற்ற பல வடிவங்களிலும் அமேசான் இந்தியா தள்ளுபடியை வழங்குகின்றனர். அமேசான் கூப்பன், சாம்பிள் மேனியா, கேஷ்பாக் ரிவார்ட்ஸ், ப்ரீ-புக், பை மோர் சேவ் மோர், அமேசான் காம்போஸ் ஆகியவை மூலமும் தள்ளுபடியை அமேசான் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். அமேசான் நிறுவனம் இந்த விற்பனையின் போது 'பாக்கெட் பிரண்ட்லி ஸ்டோர்ஸ்' என்ற பெயரில் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், அதாவது 99 ரூபாய்க்கு குறைவான ஸ்டோர் , 199 ரூபாய்க்கு குறைவான ஸ்டோர், 299 ரூபாய்க்கு குறைவான ஸ்டோர், 499 ரூபாய்க்கு குறைவான ஸ்டோர் ஆகியவை தளத்தில் இருக்கும் எனவும் அமேசான் தெரிவித்துள்ளது. 

அமேசான் இந்தியா ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஒன்கார்டு கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு உள்ளிட்ட வங்கிகளுக்கு 10 சதவீத தள்ளுபடியை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இனி கட்டணம்! ஜியோ சினிமா மாத சந்தா கட்டணம் முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News