1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்... எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்!

Amazon Mega Smartwatch Sale: அமேசான் ஸ்மார்ட்வாட்ச் மெகா விற்பனையில் பல்வேறு தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதில் 1000 ரூபாய்க்கும் கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 17, 2024, 04:46 PM IST
  • இந்த தள்ளுபடி விற்பனையில் முன்னணி நிறுவனங்களில் தயாரிப்புகளும் உள்ளன.
  • குறிப்பாக, இதில் boAt, Noise, Fire Boltt ஆகிய தயாரிப்புகளும் கிடைக்கின்றன.
  • சில மாடல்களில் வங்கிகள் சார்ந்த ஆப்பரும் உள்ளது.
1000 ரூபாய்க்கும் குறைவாக 'நச்' ஸ்மார்ட்வாட்ச்கள்... எக்கச்சக்க அம்சங்களுடன் தள்ளுபடி விலையில்! title=

Amazon Mega Smartwatch Sale Under 1000 Rupees: தற்போதைய காலகட்டத்தில் கையில் வாட்ச் அணியும் பழக்கத்தில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. முன்னரெல்லாம் வெளியில் போகும்போது நேரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக கை மணிக்கட்டில் வாட்ச் கட்டிக்கொண்டு சென்றனர். ஆனால், மொபைல் குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச்சின் வருகைக்கு பின் அதன் தேவையில்லாமல் போய்விட்டது. 

அதாவது நேரம் முதல் அனைத்தையும் ஸ்மார்ட்போனிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்பதால் எதற்கு வாட்ச் என்ற கேள்வி வந்தது. அப்போது சந்தையில் வந்ததுதான் ஸ்மார்ட்வாட்ச். இந்த ஸமார்ட்வாட்ச் நேரத்தை மட்டுமின்றி உங்களின் இதயத்துடிப்பு முதல் நீங்கள் ஒரு நாளுக்கு எத்தனை ஸ்டெப் நடந்திருக்கிறீர்கள் என்பது வரை அனைத்தையும் தெரிவித்துவிடும். 

அமேசான் மெகா ஸ்மார்ட்வாட்ச் விற்பனை

இவை ஸ்மார்ட்போனிலும் இருந்தாலும் ஜாக்கிங் செல்லும்போதோ அல்லது உடற்பயிற்சி செய்யும்போதோ மொபைலை வைத்திருப்பது கடினம். எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வைத்திருப்பதன் மூலம் பல ஆரோக்கியமான விஷயங்களை பின்பற்ற உதவிகரமாக இருக்கிறது. இது மக்களிடையும் அதிக வரவேற்பை பெற்றதால் பல்வேறு மாடல்களில் ஸ்மார்ட்வாட்ச்கள் சந்தையில் இறங்குகின்றன.

மேலும் படிக்க | அடிதூள்! BSNL 2 மலிவான ப்ரீபெய்ட் திட்டங்கள் - தினசரி 2GB டேட்டா

ஸ்மார்ட்வாட்ச்கள் அனைத்து வயதினருக்கும், ஆண் - பெண் என அனைத்து தரப்பினருக்கும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்களை உங்கள் ஸ்மார்ட்போனுடனும் இணைத்துக்கொள்ளலாம். டிஜிட்டல் டிஸ்பிளே போன்ற அம்சங்கள் ஸ்மார்ட்வாட்ச்களை வாங்க முக்கிய அம்சமாக இருக்கிறது. அந்த வகையில், தற்போது அமேசானில் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான மெகா விற்பனை நடைபெற்று வருகிறது. 

1000 ரூபாய்க்கு கீழ் ஸ்மார்ட்வாட்ச்கள்

இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்வாட்ச்களுக்கு தள்ளுபடியும், வங்கிகள் மூலமான ஆப்பர்களையும் அமேசான் வழங்குகிறது. இந்த தள்ளுபடி விற்பனையில் boAt, Noise, Fire Boltt என முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளும் வழக்கத்தைவிட குறைந்த விலையில் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த தள்ளுபடி விற்பனையில் 1000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்களை இங்கு காணலாம். 

boAt Xtend Smart Watch

இந்த ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 22 வண்ணங்களில் கிடைக்கிறது. இது 1.69 இன்ச் ஹெச்டி எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் இது ஒரு வாரம் வரை தாக்குப்பிடிக்கும். இதய துடிப்பு கண்காணிப்பு, உடற்பயிற்சி கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு மற்றும் பெடோமீட்டர் உள்ளிட்ட பல ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது. 

இதில் ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், மலை ஏறுதல், யோகா உள்ளிட்ட 14 ஸ்போர்ட்ஸ் மோடுகிள் இதில் உள்ளன. இது அமேசானின் அலெக்ஸா வசதியையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

மேலும் படிக்க | ஜியோ : வெறும் 28 நாள் பிளானை ரீச்சார்ஜ் செய்தால் ஆண்டு முழுவதும் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம்!

beatXP Vega Neo smartwatch

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆறு வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இது 1.43 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் 120Hz திரை Refresh Rate உடனும் வருகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை தாக்குப்பிடிக்கும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. 

இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு போன்ற ஆரோக்கிய அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ளமைக்கப்பட்ட மைக் மற்றும் அழைப்பிற்கான ஆன்-ஸ்கிரீன் டயல் பேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் 999 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

boAt Flash Edition Smart Watch

இந்த ஸ்மார்ட்வாட்ச் மொத்தம் 14 வண்ணங்களில் கிடைக்கிறது. இது 1.3 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது. இதன் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை தாக்குப்பிடிக்கும். இது இதய துடிப்பு கண்காணிப்பு, ஃபிட்னஸ் டிராக்கர் மற்றும் பெடோமீட்டர் உள்ளிட்ட பல ஆரோக்கிய அம்சங்களுடன் வருகிறது. 

இதில் ஓட்டப்பயிற்சி, நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், மலை ஏறுதல், யோகா, கூடைப்பந்து, கால்பந்து, பூப்பந்து, ஸ்கிப்பிங் மற்றும் நீச்சல் உள்ளிட்ட 10 ஸ்போர்ட்ஸ் மோடுகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 899 ரூபாய்க்கு அமேசானில் தற்போது கிடைக்கிறது. 

மேலும் படிக்க | ரூ.20,000க்கும் குறைவான விலையில் சிறந்த கேமரா ஸ்மார்ட்போன்! சாம்சங்க் டூ ரியல்மீ...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News