மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி!

பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் என்று திருமாவளவன் பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2024, 01:36 PM IST
  • தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது.
  • தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது.
  • பிரதமரை விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது.
மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சி! title=

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான  எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிட்டார். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு இயந்திரங்கள் அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. மின்னணு வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு வாக்கு பட்டியல் அரியலூர் வைக்கப்பட்டுள்ளது அதை பார்வையிடுவதற்காக இன்று செல்கிறேன். 

மேலும் படிக்க | நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர்... செருப்புடன் பெண்கள் போராட்டம் - கோவையில் பரபர!

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்கு எந்திரங்களை வைக்கப்பட்ட இடத்தில் சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது விசிக வேட்பாளர் ரவிக்குமார் தேர்தல் அலுவலரிடத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் சிசிடிவி கேமரா செயல் இழந்துள்ளது சந்தேகத்திற்கு இடமான சில குளறுபடிகள் நடந்துள்ளன. அரியலூரில்  பாதுகாக்கப்பட்டுள்ள சிதம்பரம் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதனை விடுதலை சிறுத்தை கட்சியினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் சிசிடிவி இயந்திரங்களை கண்காணிக்க வேண்டும், பராமரிக்க வேண்டும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் பெண்கள் தாலி முதல் எருமை மாடு வரை தற்பொழுது பேசி வருகிறார் என்ற கேள்விக்கு, பிரதமர் மோடி அண்மை நாட்களாக அவர் பேசி வருகிற கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார். அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார் அதற்கான சான்றுகள் அவரது  உரைகள் அமைந்துள்ளது. அவருடைய நிலையை மறந்து பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி போய் அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார் என்ற அளவுக்கு அவர் பேசுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அது அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

மோடி பிரச்சாரத்தில் பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையம் மோடிக்கு கடிதம் அனுப்பாமல் நட்டாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது குறித்த கேள்விக்கு, தொடக்கத்தில் இருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கக்கூடும் வகையாக உள்ளது.  இந்த பிரச்சனையில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். அப்படி பிரதமருக்கு அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம் அதற்கு மாறாக நட்டாவுக்கு அவர்களுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக இருக்கிறது, ஆளும் கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக இருக்கிறது பிரதமரை விளக்கம் கேட்பதற்கு  கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது

மேலும் 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது இதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, சரியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். ஒரு 9ம் தேதி ஆந்திராவில் உள்ள நெல்லூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளேன். எங்களது வேட்பாளர்கள் ஆந்திராவில் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் நான் பிரச்சாரம் மேற்கொள்கிறேன். இதே போல் மகாராஷ்டிராவில் தாராவில் விட்டுவிடுகிற காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கும் 1ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். மகாராஷ்டிராவில் லத்தூர் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிடுகிறார்.

 தெலுங்கானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 7 தொகுதியில் போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகின்றன அவர்களே ஆதரிக்கிறோம். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்ல என்ன கூறும் கருத்துக்கு என்ற கேள்விக்கு, ஏற்கனவே இதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். இது வரையில்  அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை என சொல்லப்படுகிறது. முதல்முறையாக அதுவும் ஒரு முதலமைச்சரை பொறுப்பில் இருப்பதை கெஜ்ரிவால் அவர்களை நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். 

அதே போல ஹேமன்சோரன் அவர்களும் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறார். அவரையும் சிறை பிடித்துள்ளனர். இது தவறான ஒரு தவறான முன் மாதிரி என்று  அரசியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.  நாடு எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது. வழக்கு செய்த பிறகு அதன் பிறகு கைது செய்ய வேண்டிய துறையினரால் தான் கடந்த காலங்களில் கைது செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த முறை அமலாக்கதுறையினர் கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது எதற்கு அதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த கைதுகள்  இந்தியா கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்விக்கு, இந்தியா கூட்டணிக்கு எந்த பின்னடைவு ஏற்படாது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இதனால் பின்னடைவு ஏற்படும். டெல்லியில் எல்லா தொகுதிகளும் காங்கிரஸ் - ஆம்ஆத்மி கூட்டணி கைப்பற்றும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | சவுக்கு சங்கருக்கு தொடரும் சிக்கல்... காரில் பிடிப்பட்ட போதைப்பொருள் - புதிய வழக்கு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News