மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம்

NEET News Latest Updates: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று எழுதிய நிலையில், மதுரையில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. அதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 5, 2024, 08:41 PM IST
  • மதுரையில் 13 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
  • தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்கு மாணவர்கள் அனுமதி
  • 3.20 நிமிடங்கள் தேர்வு நடைபெற்றது.
மாணவர்கள் ஷாக்... நீட் எழுதிய 50 வயது வழக்கிறஞர்... மதுரையில் சுவாரஸ்யம் title=

NEET News Latest Updates: இளங்கலை மருத்துவ படிப்பிற்கான தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தக்கூடிய நீட் தேர்வு (NEET) இன்று மதுரை மாவட்டத்தில் உள்ள 13 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 9,312 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். 

இதில் மதுரை , ராமநாதபுரம் , சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவியர்களும் ஆர்வமுடன் காலை முதலாகவே தேர்வு மையங்களுக்கு வருகை தந்தனர். காலை 11 மணி முதல் தேர்வு மையங்களுக்குள் மாணவ மாணவிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கடும் சோதனைக்கு பின்பாகவே அனுமதிக்கப்பட்டனர். 

கடும் சோதனை

மாணாக்கர்கள் ஆபரணங்கள் அணியக்கூடாது, பேனா உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்லக்கூடாது வாட்ச், பெல்ட் அதே போன்று ஹேர் பேண்ட் உள்ளிட்டவைகள் அணிந்து வரக்கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் கடும் சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். 

மாணவிகளுக்கு தலையில் அணியக்கூடிய ஹேர் பேண்ட் அணியக்கூடாது என கூறிய நிலையில் அதே போன்று தலையில் ஜடையும் அணியக்கூடாது என கூறப்பட்டது. இதனால், ஒவ்வொரு மாணவிகளும் அவசர அவசரமாக தங்களது ஹேர்பேண்ட்களையும் ஜடைகளையும் அகற்றிவிட்டு பதற்றத்தோடு தேர்வு மையங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டதை காண முடிந்தது.

மேலும் படிக்க | மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்! நெறிமுறைகள் என்னென்ன?

மதியம் நடைபெற்ற தேர்வு

ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் தேர்வுமைய கண்காணிப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் முழுவதுமாக தேர்வுகளை கண்காணித்தனர். மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரைக்கும் தேர்வு நடைபெற்றது. இந்த நீட் தேர்வு எழுத மாணவ மாணவிகள் மதியம் 1:30 மணிக்குள் வரவேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 11 மணிக்கு ஆர்வமுடன் வருகை தர தொடங்கினர்.

இதேபோன்று கலாச்சாரம் சார்ந்த உடைகளான புர்கா உள்ளிட்ட உடைகள் அணிந்து வரக்கூடிய மாணவிகள் 12.30 மணிக்காக தேர்வு மையங்களுக்கு வருகை தர வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 12:30 மணிக்குள்ளாக வருகை தந்த மாணவிகளுக்கு உரிய சோதனை நடத்தப்பட்ட பின்பாக தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த முறை நீட் தேர்வு முறைகேடு தடுக்கும் மற்றொரு முயற்சியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் AI மூலமாக  கண்டறிவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்களுக்கு செல்லக்கூடிய மாணாக்கர்கள் ஆதார் கார்டு மற்றும் ஏதேனும் ஒரு ஆவணங்கள் தேர்வு நுழைவு சீட்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மட்டுமே எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். 

தேர்வு எழுதிய 50 வயது வழக்கறிஞர் 

மதுரையில் நீட் தேர்வு மையத்தில் மற்றொரு சுவாரஸ்ய நிகழ்வும் நடந்தது. மதுரை நாராயணபுரம் பகுதியில் இருக்கக்கூடிய எஸ்சிவி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 50 வயது மதிக்கத்தக்க வழக்கறிஞர் சந்தானமும் தேர்வு எழுத வந்தார். மேலும் அவருக்கு இன்றைய தினம் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | நாளை வெளியாகிறது பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: ரிசல்ட் லிங்க் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News