லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ!

KKR vs LSG: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் கேகேஆர் முதலிடத்தை பிடித்துள்ளது.   

Written by - Sudharsan G | Last Updated : May 6, 2024, 12:03 AM IST
  • சுனில் நரைன் 39 பந்துகளில் 81 ரன்களை அடித்தார்.
  • கேகேஆர் பந்துவீச்சில் ஹர்ஷித் ரானா, வருண் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
  • சுனில் நரைன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
லக்னோவுக்கு மோசமான தோல்வி... முதலிடத்தில் கேகேஆர் - புள்ளிப்பட்டியல் அப்டேட் இதோ! title=

KKR vs LSG Match Highlights: ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் லக்னோ எக்னா மைதானத்தில் மோதியது. டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசியது. கொல்கத்தா அணிக்கு இந்த போட்டியில் சுனில் நரைன் - பில் சால்ட் ஜோடி அதிரடியான தொடக்கத்தை அளித்தது.

இந்த ஜோடி 61 ரன்களை குவித்தது, அதுவும் 4.1 ஓவரிலேயே... சால்ட் 14 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரி எடுத்து அவுட்டானார். தொடர்ந்து சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். ரகுவன்ஷியும் மறுமுனையில் கைக்கொடுத்தார். தொடர்ந்து சுனில் நரைன் 39 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ரஸ்ஸல் 12 ரன்களிலும், ரகுவன்ஷி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

மோஷின் கானுக்கு காயம்

சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரின்கு சிங் 16 ரன்களுக்கும், கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் 23 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ரன்களை சேர்த்தது. லக்னோ பந்துவீச்சில் நவீன் உல் ஹக் 3, யாஷ் தாக்கூர், யுத்விர் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினார். மோஷின் கானுக்கு பீல்டிங் செய்யும்போது தலையில் பலமான காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதில் யுத்விர் சிங் களமிறக்கப்பட்டார். 

மேலும் படிக்க | சிஎஸ்கேவின் வெறித்தனமா பௌலிங்... தோல்வியால் பஞ்சரானது பஞ்சாப் - டாப்பில் சென்னை!

தொடர்ந்து 236 ரன்கள் என்ற பெரிய இலக்கை லக்னோ துரத்தியது. கடந்த போட்டியை போலவே அர்ஷின் குல்கர்னி 9 ரன்கள் எடுத்து விரைவாக ஆட்டமிழந்தார். கேஎல் ராகுல் - ஸ்டாய்னிஸ் ஆகியோர் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஜோடி 50 ரன்களை குவித்தபோது ராகுல் 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அங்கிருந்து லக்னோவின் சரிவு தொடங்கியது. 

புள்ளிப்பட்டியல் அப்டேட்

ஹூடா 5, ஸ்டாய்னிஸ் 36, பூரன் 10, பதோனி 15,  ஆஷ்டன் டர்னர் 16, குர்னால் பாண்டியா 5 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டெயிலெண்டர்களின் விக்கெட்டையும் கேகேஆர் எடுக்க 16.1 ஓவர்களிலேயே லக்னோ அணி 137 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன்மூலம், கேகேஆர் அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்ஷித் ராணா, சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் நரைன் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். சுனில் நரைன் ஆட்ட நாயகன் விருதை வென்றார். 

மேலும் கொல்கத்தா அணி 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும் கொல்கத்தா 11 போட்டிகளையும், ராஜஸ்தான் 10 போட்டிகளையும் வென்றுள்ளது. நாளை சன்ரைசர்ஸ் - மும்பை அணிகள் மோத உள்ள நிலையில், அந்த போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் முதலிரண்டு இடங்களுக்கு பாதிப்பு இருக்காது. அதிலும் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றால் 3வது இடத்திற்கு முன்னேறும். சிஎஸ்கே 4வது இடத்திற்கு தள்ளப்படும். 

மேலும் படிக்க | மீம் போட்டு மோதிய சிஎஸ்கே - பஞ்சாப் அட்மின்கள்... நச்சுனு பதிலடி கொடுத்த சென்னை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News