மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 1 முதல் இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அற்புதமான வாழ்க்கை

Sevvai Peyarchi Palangal: ருச்சக் ராஜயோகம் என்றால் என்ன? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பலன் தரு? இதை பற்றி இங்கே காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 11, 2024, 02:44 PM IST
  • சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும்.
  • இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • உங்களின் பணியின் காரணமாக, உங்கள் பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள்.
மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி: ஜூன் 1 முதல் இந்த ராசிகளுக்கு அசுர வளர்ச்சி, அற்புதமான வாழ்க்கை title=

Sevvai Peyarchi Palangal: அனைத்து கிரகங்களுக்கும் தனித்துவமான சிறப்பம்சங்கள் உள்ளன. செவ்வாய் கிரகம் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார். செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக உள்ளார். ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் இருந்தால், அந்த நபர், வீரம், தைரியம், ஆற்றல் மற்றும் சக்திவாய்ந்தவராக இருக்கிறார். 

அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். செவ்வாய் பெயர்ச்சியும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜூன் 1, 2024 சனிக்கிழமையன்று, செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். செவ்வாய் கிரகத்தின் இந்த பெயர்ச்சி மாலை 3:39 மணிக்கு நடைபெறும். செவ்வாய் ஜூன் 1 முதல் ஜூலை 12 வரை மேஷ ராசியில் இருப்பார். மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி ருச்சக் ராஜயோகத்தை உருவாக்கும். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான நற்பலன்கள் கிடைக்கும். ருச்சக் ராஜயோகம் என்றால் என்ன? எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி பலன் தரு? இதை பற்றி இங்கே காணலாம். 

ருச்சக் ராஜயோகம் என்றால் என்ன?

செவ்வாய் மகர ராசியில் அல்லது அதன் சொந்த ராசியான மேஷம் அல்லது விருச்சிகத்தில் இருக்கும் போது இந்த ருச்சக் ராஜயோகம் உருவாகிறது. இந்த அற்புதமான சேர்க்கை ஏற்படும் போது, ​​அதன் செல்வாக்கின் கீழ் உள்ள ராசிக்காரர்கள் மிகவும் தைரியமாகவும், துணிச்சலாகவும் மாறுகிறார்கள். சமூகத்தில் அவர்களின் கௌரவம் அதிகரிக்கிறது. இது தவிர, செல்வத்திற்கான அபரிமிதமான வாய்ப்புகளும் ஏற்படுகின்றன. பணி இடத்தில் தனி மரியாதை கிடைக்கிறது. செவ்வாய் பெயர்ச்சியால் ஏற்படவுள்ள ருச்சக் ராஜயோகத்தால் அதிகப்படியான நல்ல பலன்களை அடையவுள்ள ராசிகளை (Zodaic Signs) பற்றி இங்கே காணலாம். 

மேஷம் (Aries):

மேஷத்தில் செவ்வாய் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இதன் மூலம் மேஷ ராசிக்காரர்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றம் அடைவார்கள். சில நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய ஒப்பந்தங்கள் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் பல புதிய நபர்களைச் சந்திப்பீர்கள், இது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

மேலும் படிக்க | நாளை சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான வாழ்க்கை... அதிகமான பண வரவு, மகிழ்ச்சி!!

கடகம் (Cancer):

கடக ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் பெயர்ச்சி மிகவும் லாபகரமானதாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாக புதிய வேலை தேடுவதில் மும்முரமாக இருந்தனர், அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். இந்த காலத்தில் நீங்கள் விரும்பிய வேலையும் கிடைக்கும். இது தவிர, கடக ராசிக்காரர்களும் தங்கள் வழக்கமான வருமானத்தை விட அதிகமாக சம்பாதிப்பார்கள். செவ்வாயின் தாக்கத்தால் வணிகத்தில் பல புதிய ஆர்டர்களைப் பெறுவார்கள். அதன் மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.

சிம்மம் (Leo)

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் பணியின் காரணமாக, உங்கள் பணியிடத்தில் நீங்கள் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தவர்கள் அல்லது படிப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைக்கும். மேலும், தனுசு ராசிக்காரர்கள் நிறைய முன்னேற்றம் அடையும் வகையில் தொழிலில் பல வாய்ப்புகள் பெருகும். இந்த நேரத்தில், இத்தனை நாட்களாக தடைப்பட்டிருந்த வணிகத் திட்டங்களும் மீண்டும் தொடங்கும். பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் தாங்களாகவே திறக்கப்படும். செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தால் பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி.... மேஷம் முதல் மீனம் வரை... அதிர்ஷ்ட ராசிகள் எவை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News