சிஎஸ்கேவுக்கு முதல் பந்தே ஷாக்... மிரட்டும் ஆர்சிபி - உச்சக்கட்ட பரபரப்பு

RCB vs CSK Match First Innings Highlights: ஐபிஎல் தொடரின் 68ஆவது லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக ஆர்சிபி அணி 20 ஓவர்களில் ரன்களை அடித்துள்ளது. 

  • May 18, 2024, 22:27 PM IST

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் செல்லும். இருப்பினும் ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலும் நெட் ரன்ரேட்டை அதிகப்படுத்த வேண்டும். 

 

1 /7

நடப்பு 17வது ஐபிஎல் தொடரின் 68வது லீக் போட்டியில் ஆர்சிபி - சிஎஸ்கே அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.   

2 /7

சிஎஸ்கே அணியில் மொயின் அலிக்கு பதில் மிட்செல் சான்ட்னர் களமிறங்கினார். தொடர்ந்து, ரிஸ்விக்கு பதில் ரஹானே களமிறங்கினார். ஆர்சிபி அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.  

3 /7

ஆர்சிபி ஓப்பனர்கள் விராட் கோலி - டூ பிளெசிஸ் முதல் 3 ஓவர்களில் 31 ரன்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து அரைமணி நேரத்திற்கும் பிறகு இரவு 8.25 மணிக்கு ஆர்சிபி மீண்டும் தனது பேட்டிங்கை தொடர்ந்தது.   

4 /7

மழைக்கு பின் தீக்ஷனா - சான்ட்னர் - ஜடேஜா ஜோடி சுழற்பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டியது. பவர்பிளேவுக்கு பின் ஜடேஜா - சான்ட்னர் ஆகியோர் வீசினாலும் ஜடேஜாவின் ஓவரை விராட் கோலி வெளுத்துக் கட்டினார். ஆனால் சான்ட்னரின் ஓவரில் சற்று தடுமாறுவது தெரிந்தது. சான்ட்னர் வீசிய 10வது ஓவரில் மூன்றாவது பந்தில் விராட் கோலி சிக்ஸ் அடித்து அசத்திய நிலையில், அடுத்த பந்தே ஆட்டமிழந்து வெளியேறினார்.   

5 /7

விராட் கோலி 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களை அடித்தார். ஃபாப் டூ பிளெசிஸ் அடுத்து 39 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் 54 ரன்களை எடுத்து ரன்அவுட்டானார். தொடர்ந்து, ரஜத் பட்டிதார் 41, தினேஷ் கார்த்திக் 14, மேக்ஸ்வெல் 16 ரன்களையும் என கேமியோ இன்னிங்ஸ் ஆடினர்.   

6 /7

இதன்மூலம், ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்தது. ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், தேஷ்பாண்டே, சான்ட்னர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.   

7 /7

தொடர்ந்து, ஆர்சிபி பிளே ஆப் செல்ல சிஎஸ்கே அணியை 201 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். சிஎஸ்கே அணிக்கு இலக்கு 219 என்றாலும் 201 ரன்கள் அடித்தாலே பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிடலாம். எனவே இலக்கு 201 ஆக தான் சிஎஸ்கே பார்க்கும். இருப்பினும் மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ருதுராஜ் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். யாஷ் தயாள் வீசிய 3வது ஓவரில் மிட்செல் 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.