ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இடிமுழக்கம் திரைப்படத்திற்கு அங்கிகாரம்!

Idi Muzhakkam Movie: ஜிவி பிரகாஷ், காயத்ரி சங்கர் நடித்துள்ள இடிமுழக்கம் படம் பூனே சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டை பெற்றுள்ளது.

 

1 /5

கலை கலைமகன் முபராக் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், காயத்ரி சங்கர் நடிப்பில் உருவான தமிழ் திரைப்படம் இடிமுழக்கம்.  

2 /5

இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் 22வது பூனே சர்வதேச திரைப்பட விழாவில் இடிமுழக்கம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து திரையிட்டது விழாக்குழு.  

3 /5

இந்திய சினிமாப் பிரிவில்  திரையிடப்பட்ட இடிமுழக்கம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.  

4 /5

இதனால் இந்திய மீடியாக்களின் கவனம் படத்தின் மீது விழுந்ததுள்ளது. நாயகன் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் சீனு ராமசாமி இருவரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

5 /5

படப்பிடிப்பு முடிந்தும் நீண்ட நாட்களாக வெளிவராமல் இருந்த இடிமுழக்கம் படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.  படக்குழு அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தி உள்ளது.