அடாவடி யூரிக் அமிலத்தை அட்டகாசமாய் குறைக்கும் அசத்தல் உணவுகள்

Uric Acid Control: உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரித்தால், உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக கற்கள், மூட்டுவலி போன்ற நோய்கள் நம்மை பற்றிக்கொள்ளலாம். யூரிக் அமில அளவை கட்டுக்குள் வைப்பது மிக அவசியம். 

Uric Acid Control: யூரில் அமிலம் பியூரின்கள் உடைக்கப்படும்போது உருவாகும் கழிவுப்பொருளாகும். இது சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகிறது. ஆனால் அது உடலில் அதிகமாக உருவாகத் தொடங்கும் போது, ​​சிறுநீரகங்களால் அவற்றை வெளியேற்ற முடியாமல் போகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் இவை மூட்டுகளில் குவிந்து வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. யூரிக் அமில அளவை குறைக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படும் யூரிக் அமில பிரச்சனையை இயற்கையான வழியில் கட்டுப்படுத்தலாம். சில குறிப்பிட்ட உணவுகளை நமது தினசரி டயட்டில் சேர்ப்பதன் மூலம் யூரிக் அமில அளவுகளை கட்டுப்படுத்த முடியும். அவற்றை பற்றி இங்கே காணலாம். 

2 /8

பீட்ரூட்: அதிக யூரிக் அமில பிரச்சனையால் போராடிக் கொண்டிருப்பவர்கள் பீட்ரூட்டை உட்கொள்வதால் நன்மை பெறாலாம். வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் சிறுநீரகத்தின் வடிகட்டுதல் திறனை அதிகரிக்கும் திறன் கொண்டது.

3 /8

காபி: யூரிக் அமில நோயாளிகளுக்கு காபி மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் அதிகரித்த யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுநீரகத்தின் சரியான செயல்பாட்டில் காபி நன்மை பயக்கும் என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

4 /8

மஞ்சள்: மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள், பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குர்குமின் இருப்பதால், இதை உட்கொள்வதால் யூரிக் அமிலத்தைக் குறைப்பதில் நல்ல பலன் கிடைக்கிறது. காய்கறிகள், சூப்கள், தேநீர் என அனைத்திலும் சிறிது மஞ்சள் சேர்த்து உட்கொள்வது நல்லது. 

5 /8

அதிக யூரிக் அமிலம் இருந்தால், பப்பாளியை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் பாப்பைன் எனப்படும் புரோட்டியோலிடிக் என்சைம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது புரதத்தை ஜீரணிக்க மிகவும் உதவியாகக் கருதப்படுகிறது. இது இரத்தத்தில் யூரிக் அமிலம் உருவாவதைத் தடுக்க இது பெரிதும் உதவுகிறது

6 /8

இஞ்சி: அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ள இஞ்சியை உட்கொள்வதால், யூரிக் அமிலத்தை எளிதாக குறைக்க முடியும். மேலும், கீல்வாத பிரச்சனையையும் இஞ்சி குறைக்கிறது. இஞ்சி யூரிக் அமிலத்தால் ஏற்படும் வீக்கத்தையும் குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

7 /8

ஆரஞ்சு சாறு: அதிக யூரிக் அமிலம் பிரச்சனையில் ஆரஞ்சு சாறு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள பண்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவுவதோடு, சிறுநீரகங்கள் உட்பட உடலின் பல பாகங்களுக்கு பெரும் நன்மைகளை வழங்குகின்றன. 

8 /8

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.