Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் பார்டி புகைப்படங்கள்! கேக்கில் என்ன எழுதியிருக்கு?

Director Lokesh Kanagaraj Birthday Party Celebration Latest Photos : தமிழ் திரையுலகின் டாப் இயக்குநர்களுள் ஒருவராக இருக்கும் லோகேஷ் கனகராஜ், தனது 38வது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Director Lokesh Kanagaraj Birthday Party Celebration Latest Photos : கோலிவுட் திரையுலகின் ஹிட் இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். கடந்த ஆண்டு இவர் இயக்கிய ‘லியோ’ திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. மாநகரம் படத்தை இயக்கி திரையுலகிற்குள் அறிமுகமான லோகேஷ், கடந்த 7 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை கண்டுவிட்டார். இவருக்கு தற்போது 38 வயதாகிறது. லோகேஷின் பிறந்தநாள் கொண்டாட்ட பார்டி நேற்று நடைப்பெற்றது. இதில் இவரது திரையுலக நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். 

1 /7

2017ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தை இயக்கி அறிமுகமானவர், லோகேஷ் கனகராஜ். இதையடுத்து கைதி படத்தை இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்து நடிகர் விஜய்யை வைத்து மாஸ்டர் படம், கமலை வைத்து விக்ரம், மீண்டும் விஜய்யை வைத்து லியோ படம் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்து டாப் இயக்குநராக மாறிவிட்டார். 

2 /7

லோகேஷ் கனகராஜ்ஜிற்கு இன்று (மார்ச் 14) பிறந்தநாள். இதையடுத்து, இவரது பிறந்தநாள் பார்டி நேற்று இரவு நடைப்பெற்றுள்ளது. இதில் அவர் வெட்டிய கேக்கில் LCU (Lokesh Cinematic Universe) என்றும் DC (Hollywood Movie Universe) என்றும் எழுதப்பட்டிருந்தது. LCUவை தமிழ் திரையுலகில் உருவாகியவர், லோகேஷ். அவருக்கு DC படங்கள் பிடிக்கும் என்பதால் கேக்கில் DC என்று எழுதப்பட்டிருக்கிறது. 

3 /7

லோகேஷ் கன்காராஜ்ஜின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தற்போது லோகி தன் படத்திற்கான கதையை எழுதுவதற்காக சமூக வலைதள பக்கங்களில் இருந்து தள்ளியிருக்கிறார். அதனால் இந்த போட்டோக்களை அவர் வெளியிடவில்லை. 

4 /7

லோகேஷ் கனகராஜ்ஜின் இந்த பிறந்தநாள் கொண்ட்டாட்டத்தில் அர்ஜுன் தாஸ், இயக்குநர் ரத்ன குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

5 /7

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171வது பட வேலைகளில் பிசியாக இருக்கிறார். இதையடுத்து அவர் பான் இந்தியா ஸ்டார் பிரபாஸை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

6 /7

லோகேஷின் பிறந்தநாளையொட்டி, கமல் ஹாசனின் ராஜ் கமல் இண்டர்னேஷனல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டர் பதிவினை வெளியிட்டிருக்கிறது. 

7 /7

கைதி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த கண்ணன் ரவி, சிவகார்த்திகேயன் மற்றும் லோகேஷ் கனகராஜ் உடன் எடுத்த செல்பி புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.