பெண்களை மையமாக வைத்து வெளியாகி ஹிட் ஆனா படங்கள்!

Best Women Centric Movies: நயன்தாரா முதல் சமந்தா வரை தற்போது முன்னணி கதாநாயகிகள் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 25, 2023, 07:32 AM IST
  • பெண்களை மையப்படுத்தி வரும் படங்கள்.
  • பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்து வருகின்றன.
  • தென்னிந்திய நடிகைகள் அதில் முன்னிலை.
பெண்களை மையமாக வைத்து வெளியாகி ஹிட் ஆனா படங்கள்!  title=

தற்போது தென்னிந்தியாவில் பெண்களை மையப்படுத்திய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் அதிகளவில் வெளியாகி வருகிறது.  குறிப்பாக முன்னணி நடிகைகள் இப்படி பட்ட படங்களில் மட்டுமே நடித்து வருகின்றனர்.  மேலும் இப்படி வெளியாகும் சில படங்கள் பாக்ஸ் ஆபிசில் மிகப்பிரிய அளவில் ஹிட் அடித்துள்ளன.  கதாநாயகிகள் ஹீரோவாக நடித்து ஹிட் ஆனா படங்களை பற்றி பார்ப்போம்.

கபே ரணசிங்கம்

கா பே ரணசிங்கம் படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். பி. விருமாண்டி இயக்குனராக அறிமுகமான இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி, ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். ஒரு உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டு இருந்தது.  துபாயில் இருந்து தனது இறந்த கணவரின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவர சிரமப்படும் கதையை பற்றி பேசுகிறது.  ஜீ 5 தளத்தில் இந்த படத்தை பார்க்கலாம்.

 மேலும் படிக்க | மீண்டும் வெளியாகிறது வீரப்பனின் டாக்குமெண்டரி! எந்த தளத்தில் தெரியுமா?

அருந்ததி 

அருந்ததி 2009 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கொடி இராமக்கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் அனுசுக்கா செட்டி, சோனு சூத், சாயாஜி சிண்டே ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன், அதிக வசூலையும் பெற்றது. ​​அருந்ததி படத்தில் ஜெஜம்மாவாக அனுஷ்கா ஷெட்டி நடித்தது, பெண் சார்ந்த திரைப்படத்தின் மிகச்சிறந்த நடிப்பில் ஒன்றாகப் பாராட்டப்படுகிறது. இந்தத் திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக வசூல் செய்த இரண்டாவது தெலுங்குத் திரைப்படம் என்னும் சாதனையையும் இத்திரைப்படம் உருவாக்கியது. தெலுங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளத்தில் இதே பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.  தற்போது இந்த படத்தை ஹாட்ஸ்டாரில் பார்த்து மகிழலாம்.

யசோதா 

யசோதா 2022 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு மொழி ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஒரு அப்பாவிப் பெண் காணாமல் போன தன் தங்கையை தேடி கண்டுபிடிக்க வாடகை தாயாக மாறுகிறார் சமந்தா.  அதன் பின்பு இதில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கண்டு பிடிக்கிறார், பின்பு என்ன ஆனது என்பதே யசோதா படத்தின் கதை.  ஹரி-ஹரிஷ் எழுதி இயக்கிய இந்த படத்தில் உன்னி முகுந்தன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் முரளி சர்மா ஆகியோருடன் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யசோதா விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.  அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம்.

மகாநதி

மகாநதி படம் மறந்த மிகப் பெரிய இந்திய நடிகைகளில் ஒருவராகப் பரவலாகக் கருதப்படும் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாகும். இந்த படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு 2018 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றுத்தந்தது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக நடித்து உள்ளார். நாக அஸ்வின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.  அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம்.

அறம்

ஆழ்துளை கிணற்றில் மாற்றி கொள்ளும் ஒரு குழந்தையை காப்பாற்ற நினைக்கும் ஒரு மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்துள்ள படம் அறம். ந. கோபி நயினார் இயக்கத்தில் 2017ம் ஆண்டு இந்த படம் வெளியானது.  இத்திரைப்படத்தில், காக்கா முட்டை திரைப்படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | வைரலாகும் முன்னணி நடிகையின் சிறுவயது புகைப்படம்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News