100 கோடி வசூலில் இடம் பிடித்த இந்த தமிழ் படம்! தயாரிப்பாளர் கூட எதிர்பார்க்கவில்லை!

விஷால், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Oct 5, 2023, 07:51 AM IST
  • 100 கோடி வசூல் செய்த மார்க் ஆண்டனி.
  • ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
  • இன்னும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
100 கோடி வசூலில் இடம் பிடித்த இந்த தமிழ் படம்! தயாரிப்பாளர் கூட எதிர்பார்க்கவில்லை!  title=

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஷால் நடிப்பில் வெளியான சமீபத்திய திரைப்படமான மார்க் ஆண்டனி எதிர்பாராத பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது.  ட்ரெய்லர் வெளியாவதற்கு முன் எந்த எதிர்பார்ப்பும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இல்லை, ஆனால் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து மார்க் ஆண்டனி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது.  காரணம், ட்ரைலரில் இருந்த டயலாக்ஸ், பஞ்சுமிட்டாய் ரீமிக்ஸ், எஸ்ஜே சூர்யா ரியாக்சன்ஸ் என சொல்லிக்கொண்டே போகலாம்.  படம் வெளியான பிறகும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸின் காரணமாக அதிக வரவேற்பை பெற்றது.  மேலும் படம் அனைத்து இடங்களிலும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.  இப்படம் விஷாலின் முதல் 100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்க | 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ்நாட்டில் இப்படம் 60 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது, வெளிநாடுகளில் இப்படம் சுமார் 2.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. கேரளா, கர்நாடகாவிலும் படம் நன்றாக வசூல் செய்து வருகிறது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும் படம் எதிர்பார்த்தபடி வேலை செய்யவில்லை, இருப்பினும் பல இடங்களில் இன்னும் வசூல் செய்து வருகிறது. விஷாலுக்கு இந்த பாம் 100 கோடி வசூல் செய்யும் முதல் படமாக இது இருக்கும்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவையான திரைக்கதையால் ரசிகர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர், அதே நேரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் அற்புதமான நடிப்பு படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது.  விஷாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சில காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்து ரசிகர்களை கவர்ந்தார். 

படத்தின் புதிய திரைக்கதை அனைவரையும் கவர்ந்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை மிகவும் பக்கபலமாக இருந்தது, படத்தில் பயன்படுத்திய பழைய தமிழ் பாடல்கள் திரையரங்கை அதிர செய்தது.  மார்க் ஆண்டனியில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர், மேலும் ரிது வர்மா, செல்வராகவன், சுனில் மற்றும் அபிநயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை இரண்டு கேங்க்ஸ்டர்களை சுற்றி நடக்கிறது. மார்க் மற்றும் ஆண்டனி, ஒரு போன் மூலம் கடந்த காலத்திற்கு தொடர்பு கொள்கிறார்கள், அதிலிருந்து ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்கிறது மார்க் ஆண்டனி.

மார்க் ஆண்டனி படம் வெளியாவதற்கு முன்பு பல நெகட்டிவ் டாக்ஸ் இருந்தது.  காரணம், இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய முந்தைய படங்கள் தான்.  கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான பகீரா படம் சரியாக ஓடவில்லை, அதற்கு முன் AAA படமும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. மேலும், விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களும் சரியாக ஓடவில்லை.  தயாரிப்பாளருக்கும் முந்தைய படங்கள் நல்ல வசூலை பெற்று தரவில்லை. இதன் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது.  இருப்பினும் தற்போது 100 கோடி வசூலில் இடம் பிடித்துள்ளது.  அடுத்தடுத்த வாரங்களில் வெளியான படங்கள் சரியாக போகாததால் மார்க் ஆண்டனிக்கு சாதகமாக அமைந்தது. மார்க் ஆண்டனி படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  விரைவில் படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.  

மேலும் படிக்க | Sai Pallavi: அடேங்கப்பா..மேக்-அப் போடாமலும் சாய் பல்லவி இத்தனை அழகா இருக்க இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News