அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!

Aneethi Movie Review: வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ள அநீதி படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jul 21, 2023, 08:27 AM IST
  • அநீதி படம் இன்று வெளியாகி உள்ளது.
  • அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நடித்துள்ளனர்.
  • வசந்தபாலன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
அர்ஜுன் தாஸ் நடித்துள்ள அநீதி படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்! title=

அர்ஜுன் தாஸ் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நடிகராக மாறியுள்ளார், கைதி படத்தில் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் அவரது குரலுக்காகவே அதிக ரசிகர் பட்டாள்கள் உள்ளது.  கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும், அந்தகாரம் படத்தில் கதையின் நாயகனாகவும் நடித்த அர்ஜுன் தாஸ் அநீதி படத்தின் மூலம் ஒரு முழு நீர ஹீரோவாக அறிமுகம் ஆகி உள்ளார்.  வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது, மேலும் வசந்தபாலனின் படம் என்பதாலும் எதிர்பார்ப்பு பெருகி இருந்தது.  ஜிவி பிரகாஷ் இசையமைக்க எம்.கிருஷ்ண குமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம், ஜி.வசந்தபாலன் ஆகியோர் தயாரித்து உள்ளனர்.  அநீதி படத்தில் அர்ஜுன் தாஸ் திருமேனி என்ற கதாபாத்திரத்திலும், துஷாரா விஜயன் சுப்புலட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  மேலும் காளி வெங்கட், வனிதா விஜயகுமார், அர்ஜூன் சிதம்பரம், பரணி, சாரா, அறந்தாங்கி நிஷா, சிவா போன்ற பலர் நடித்துள்ளனர்.

மேலும் படிக்க | இந்த 5 தென்னிந்திய சூப்பர் ஹீரோ படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

சென்னையில் ஒரு உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் திரு.  அவருக்கு யாரைப் பார்த்தாலும் கொள்ளணும் என்கின்ற ஒரு மனநோய்யில் அவதிப்பட்டு வருகிறார்.  இந்த நிலையில் சுப்புலட்சுமியை பார்த்ததும் அவருக்கு அந்த எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது.  சுப்பு ஒரு பணக்கார வீட்டில் வயதான பாட்டியை பார்த்துக் கொள்ளும் வேலை பார்த்து வருகிறார்.  அவர்களது மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் பணிபுரிகின்றனர்.  எதிர்பாராத விதமாக அந்த பாட்டி இறந்துவிட அதன் பிறகு என்ன ஆனது என்பதே அநீதி படத்தில் கதை.

வழக்கம்போல வசந்தபாலன் ஒரு எளிய மக்களின் கதையை படமாக எடுத்துள்ளார்.  எந்தவித சினிமா தனமும் இல்லாத ஒரு எதார்த்தமான திரை கதையின் மூலம் மீண்டும் அசத்தியுள்ளார்.  வில்லனாக மிரட்டி இருந்தாலும் அர்ஜுன் தாஸ் அநீதி படத்தில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.  ஒரு முழு நீள படத்தை தாங்கி பிடிக்கும் அளவிற்கு ஒரு தேர்ந்த நடிகராக மாறி உள்ளார்.  எமோஷனல் காட்சிகளிலும் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் சிறப்பாகவே நடித்துள்ளார்.  துஷாரா விஜயன் நம் பக்கத்து வீட்டு பெண் போல் தனது நடிப்பால் உணர்த்துகிறார்.  இரண்டாம் பாதி முழுக்கவே அழுது கொண்டும், என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடும் அந்த முகபாவனையும் சுப்பு என்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.

இரண்டாம் பாதியில் சிறிது நேரமே வரும் காளி வெங்கட் கண்கலங்க வைக்கிறார், அவருக்கும் சின்னப் பையனிற்கும் இடையே இருக்கும் அன்பு அனைவரையும் ஈர்க்கிறது. சாரா மற்றும் பரணி தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளனர்.  வனிதா விஜயகுமார் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் கதையில் என்ட்ரி ஆன பின்பு திரைக்கதை சூடு பிடிக்கிறது.  பணக்காரர்கள் ஏழை மக்களை எவ்வாறு நடத்துகின்றனர் என்பதை வசந்த பாலன் அநீதி படத்தின் மூலம் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.  

ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும் கதைக்கு தேவையானது போல் இருந்தது.  அதிகாரம் கையில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம், மன்னிப்பு கேட்கும் போது மன்னிக்காதவன் மனுசன் இல்ல போன்ற எஸ் கே ஜீவாவின் வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.  ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே மற்றும் எடிட்டர் ரவிக்குமார் இந்த படத்திற்கு கூடுதல் உழைப்பை கொடுத்துள்ளனர்.  முதல் பாதி முழுக்கவே பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் சென்றாலும் இடைவேளை ஒரு முக்கியமான இடத்தில் வருகிறது, அது படத்தை முழுவதுமாக பார்க்கத் தூண்டுகிறது.  ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்களோ அதனை எந்தவித சினிமா தனமும் இல்லாமல் காட்சிப்படுத்தியது அழகு.  இரண்டாம் பாதியில் வரும் அதிகப்படியான அடிதடி காட்சிகளை மட்டும் சற்று கம்மி பண்ணி இருந்திருக்கலாம்.  அநீதி - நீதி.

மேலும் படிக்க | விவாகரத்து லிஸ்டில் இணைந்த 'சுப்ரமணியபுரம்' பட நாயகி..! காதல் கணவரை பிரிகிறாரா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News