சந்தானம் நடிக்கும் அடுத்த படம்! இதுவும் பேய் கதைதான்..

நடிகர் சந்தானம், புதிதாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படமும் அவர் முன்னர் நடித்த பேய் படத்தின் இரண்டாம் பாகம்தான் என தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 28, 2024, 06:58 PM IST
  • காமெடி நடிகராக இருந்து ஹீரோவானவர் சந்தானம்.
  • இவர் அடுத்து ஒரு பேய் படத்தில் நடிக்கிறார்.
  • இந்த படத்தில் அவருடன் இன்னொரு பெரிய நடிகர் இணைய உள்ளதாக தகவல்.
சந்தானம் நடிக்கும் அடுத்த படம்! இதுவும் பேய் கதைதான்.. title=

காமெடி நடிகராக இருந்து ஹீரோ நடிகரான சந்தானம், அடுத்து இன்னொரு ஹாரர் படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 
காமெடி நடிகர்-ஹீரோ நடிகர்..

சின்னத்திரை உலகில் ‘லொள்ளு சபா’ எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சந்தானம். தொடர்ந்து அந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு பெரிய திரையிலும் வாய்ப்பு கிடைத்து. இதை தொடர்ந்து ரஜினிகாந்த், சிம்பு, ஆர்யா, சூர்யா, விஜய் என அனைத்து நடிகர்களின் படங்களிலும் காமெடி கதாப்பாத்திரங்களிலும் துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்து விட்டார். இப்படி காமெடி கதாப்பாத்திரங்களில் மட்டும் நடித்து வந்த இவர், சில வருடங்களுக்கு முன்பு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அறிவித்தார். இதைத்தாெடர்ந்து அவர் கூறியது போலவே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 

ஹாரர் பட ஹீராேவாக நடிக்கும் சந்தானம்..

நடிகர் சந்தானம், தான் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ஃபீல் குட் படங்களில் நடித்து வந்தார். அது அவருக்கு செட் ஆகியிருந்தாலும் பின்னர் ஹாரர்-காமெடி படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர், முதன் முதலில் ஹீரோவாக நடித்த ஹாரர் படம், தில்லுக்கு துட்டு. இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடிக்க, தொடர்ந்து வேறு கதையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்தார். 

மேலும் படிக்க | Bhavatharini: ‘மயில் போல பொண்ணு ஒன்னு..’ பவதாரணியின் சிறு வயது புகைப்படங்கள்!

டிடி ரிட்டர்ன்ஸ் 2:

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டர்ன்ஸ் என ஒரே பெயரில் மூன்று பேய் படங்களில் நடித்த இவர், அடுத்ததாக டிடி ரிட்டர்ன்ஸ் 2 என்ற பெயரிலும் ஒரு பேய் படத்தில் நடிக்கின்றார். இதில், பிரேம் ஆனந்த் இயக்கிய டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. இப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்தில் நடிக்கிறார், சந்தானம். 

ஆர்யா நடிக்கிறாரா? 

நடிகர் சந்தானத்துடன் மிகவும் செட் ஆன ஹீரோக்களுள் ஒருவர், ஆர்யா. இவர் திரைக்கு முன்னாளும் பின்னாளும் சந்தானத்திற்கு நல்ல நண்பராகவும் உள்ளார். இவர்கள் சேர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, சேட்டை, ஒரு கல்லூரியின் கதை என பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர். இவர்கள் மீண்டும் டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது கேமியோவில் நடிக்கிறாரா என்பது தெரியவில்லை. 

மேலும் படிக்க | மறைந்த நடிகை அங்காடி தெரு சிந்துவின் த.நா திரைப்படம் வெளியானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News