விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?

நடிகர் விஜய்யின் ஒரு படத்தை பார்த்து விட்டு, நடிகர் அஜித் வெகுவாக பாராட்டினாராம். அது என்ன படம் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 12, 2024, 11:31 PM IST
  • விஜய் படத்தை பார்த்து பாராட்டிய அஜித்
  • நல்லா பண்ணியிருக்கீங்க..என்று கூறினாராம்
  • எந்த படம் தெரியுமா?
விஜய்யின் ‘இந்த’ படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் அஜித்! எந்த படம் தெரியுமா?  title=

அஜித்தும் விஜய்யும் திரையுலக ரசிகர்களை பொறுத்த வரை போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டாலும் இருவரும் அடிப்படையில் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இதை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்களும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. 

கோலிவுட்டின் சிம்ம சொப்பனமாக திகழும் நடிகர்கள்!

விஜய், தனது தந்தையால் திரையுலகிற்கு வந்தவர் என்றாலும், இவர் தற்போது இருக்கும் இடத்தை பிடிப்பதற்கு கடின உழைப்பை மேற்காெண்டார். இதே போலத்தான் நடிகர் அஜித்தும். விஜய்க்காவது அவரது தந்தை இருந்தார். ஆனால் அஜித், சினிமா பின்புலமே இன்றி நடிக்க வந்தார். இருவரும் வெவ்வெறு கால கட்டங்களில் சினிமாவில் நடிக்க வந்திருந்தாலும், ஒரே நேரத்தில்தான் வளர ஆரம்பித்தனர். இருவரது படங்களும் சில சமயங்களில் ஒரே நேரத்தில் வெளியாகும். அப்படி வெளியாகும் படங்களும் கூட, நன்றாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கின்றன. 

இதனாலேயே இவர்களை வைத்து ‘தல’ ‘தளபதி’ எனும் போட்டி உருவாக்கப்பட்டது. இவர்கள் இது குறித்து எங்கேயும் பேசியதில்லை என்றாலும், இவர்களது ரசிகர்கள் சிலர் வேண்டுமென்றே வன்மம் கொண்டு பல சமயங்களில் மாற்றி மாற்றி சமூக வலைதளங்களில் அடித்துக்கொள்வர். இருப்பினும், அஜித்தும் விஜய்யும் தமிழ் சினிமாவில் இனி வரும் ஹீரோக்கள் யாரும் பிடிக்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர் என்பதில் சந்தேகமே இல்லை. 

அஜித்தை பாராட்டி பேசும் விஜய்..

நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளாக, தான் நடிக்கும் படங்களின் விழாக்களில் அரசியல் கலந்து பேசி வந்தது வாடிக்கையாகி வந்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே அவர் அரசியலுக்கும் வந்து விட்டார். லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய அவர், “சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான்..தலன்னா ஒருத்தர்தான்..” என்று கூறினார். இதே போல அஜித்தை புகழ்ந்து பல இடங்களில் பேசியிருக்கிறார். அஜித்தும் பர்சனலாக விஜய்யை பல சமயங்களில் பாராட்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | KPY பாலாவுக்கு கல்யாணமா!? அவரே கொடுத்த அப்டேட்…

விஜய்யின் படத்தை பாராட்டிய அஜித்..

விஜய் நடித்த ஒரு படத்தை பார்த்து தன்னை பாராட்டியதாக நடிகர் அர்ஜுன் தாஸ் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். ரசவாதி படத்தின் ப்ரமோஷன்களில் பிசியாக இருந்த இவர், ஒரு நேர்காணலில் பேசியுள்ள விஷயம், வைரலாகி வருகிறது. மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தை பார்த்த அஜித் அர்ஜுன் தாஸை அழைத்து ‘நல்லா நடிச்சிருக்கீங்க..’ என பாராட்டியதாக குறிப்பிட்டிருக்கிறார். 

அஜித், தற்போது குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கிள் பிசியாக இருக்கிறார். இவரது விடாமுயற்சி பட வேலைகளும் தாெடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில், அவர் அவ்வப்போது பைக் பயணங்களையும் மேற்கொண்டு, குடும்பத்தினருடனும் இன்ப சுற்றுலா சென்று வருகிறார்.

நடிகர் விஜய், தனது GOAT படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்தவுடன் தளபதி 69 பட வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவதாக கூறப்படுகிறது. இதில் நடித்து முடித்தவுடன் நடிகர் விஜய் முழு நேர அரசியலில் இறங்க இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற பெயரில் இவர் அரசியல் கட்சியை ஆரம்பித்திருந்தார். 

மேலும் படிக்க | சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் விவாகரத்து? இதுதான் காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News