எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும்

உங்கள் சமையலறையில் இருக்கும் மஞ்சள் பொடி உடல் எடையைக் குறைக்க உதவும் என்று உங்களுக்கு தெரியுமா. ஆம் சரியான முறையில் இதை பயன்படுத்தினால் உடல் எடையை சுலாமாக குறைக்க முடியும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 5, 2024, 05:54 PM IST
  • இந்த இரண்டு விஷயங்களின் உதவியுடன், உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • இந்த காரணத்தால் உடல் எடையை குறைக்க மஞ்சள் உதவும்.
  • உடல் எடையைக் குறைக்க மஞ்சள் பெரிதும் உதவும்.
எகிறும் உடல் எடையை ஈசியா குறைக்கலாம்.. இந்த ஒரு மசாலா பொருள் இருந்தால் போதும் title=

Weight Loss Tips With Turmeric: உடல் எடையை குறைக்க (Weight Loss Tips), மக்கள் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். ஆனால் இந்த வழக்கத்தை கடைபிடிக்க முடியாததால் உடல் எடையை குறைக்க முடியாமல் சிலர் சிரமம் படுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில் மக்கள் தங்களின் உடல் எடையை குறைக்க, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் அல்லது இரசாயன பொருட்களை உட்கொள்ளத் தொடங்குகிறார்கள். இதனால் பக்கவிளைவுகள் ஏற்படத் தொடங்கும். இதற்கு பதிலாக உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு பொருளை உட்கொள்வதால் உடல் எடையைக் குறைக்கலாம். அந்த பொருள் மஞ்சள் (Turmeric) ஆகும். இந்த மஞ்சள் எடையைக் குறைக்க உதவும். எனினும் இந்த பொடியை சரியான முறையில் உட்கொள்ளத் தொடங்க வேண்டும். மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும், நோய்களில் இருந்து உடலை காக்கவும் உதவுகிறது. இந்நிலையில் இப்போது இந்த மஞ்சளை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி என்று பார்ப்போம்.

இந்த காரணத்தால் உடல் எடையை குறைக்க மஞ்சள் உதவும்:
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் அழற்சியை குறைக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த இரண்டு விஷயங்களின் உதவியுடன், உடல் எடையைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க | How To Become Attractive Man: அழகான ஆண்மகனாக மாறி அனைவரையும் வசியம் செய்யலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

மஞ்சள் பால் | Turmeric Milk:
இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் ஏதோ ஒரு நோயால் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில நேரங்களில் தூங்குவதில் சிரமம் மற்றும் சில நேரங்களில் மன அழுத்தத்தால் சிரமப்படுகிறார். மஞ்சள் பால் இவை அனைத்திற்கும் நன்மை பயக்கும். ஒரு கிளாஸ் சூடான பாலில் சிறிது இலவங்கப்பட்டை தூள் சேர்த்து குடிக்கவும். இது எடையைக் குறைக்கவும் தூக்கத்தை மேம்படுத்தவும் உதவும்.

மஞ்சள் தண்ணீர் | Turmeric Water:
மஞ்சள் பால் உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். உடல் எடையைக் குறைக்க மஞ்சள் பெரிதும் உதவும்.

டயட் மற்றும் உடற்பயிற்சியையும் செய்யுங்கள் | Diet and Exercise:
மஞ்சள் உங்கள் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது, ஆனால் அதனுடன் நீங்கள் உங்கள் உணவையும் கட்டுப்படுத்த வேண்டும். குறிப்பாக் நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். மஞ்சளை உட்கொள்வதோடு, உங்கள் உணவைக் கட்டுப்படுத்தவும், தினமும் சில உடற்பயிற்சிகளையும் செய்யவும்.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Personality Trait Of People Who Walk Fast : வேகமாக நடப்பவரா நீங்கள்? அப்போ நீங்க ‘இந்த’ குணம் கொண்டவரா இருப்பீங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News