பசியுடன் தூக்கமா?... பல பிரச்னைகள் உருவாகும் உஷார்

ஒரு மனிதன் இரவில் கொஞ்சமேனும் சாப்பிட வேண்டும். பசியுடன் தூங்கினால் உடல்நலத்துக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உருவாகும்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 15, 2022, 04:54 PM IST
  • சாப்பிடாமல் தூங்குவது சமூகத்தில் அதிகரித்துள்ளது
  • அப்படி தூங்கினால் உடல்நலத்துக்கு பிரச்னைகள் உருவாகும்
  • சிறிதளவேனும் இரவில் சாப்பிடுவது அவசியமான ஒன்று
 பசியுடன் தூக்கமா?... பல பிரச்னைகள் உருவாகும் உஷார் title=

இந்தியாவில் 20 கோடி பேர் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தூங்குகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. உணவு கிடைக்காமல் பசியுடன் தூங்குபவர்கள் ஒருபுறம் இருக்க, பலர் உணவு கிடைத்தும் இரவில் சாப்பிடாமல் உறங்க செல்கிறார்கள். அப்படி ஒருசில முறை செய்தால் உடல்நலத்துக்கு பிரச்னை வராது. ஆனால் மாதத்தில் பல நாள்களில் பலர் சாப்பிடாமேலேயெ தூங்குகிறார்கள். இது அவர்களது உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி தீங்கு விளைவிக்கும். மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். அப்படி சம இடைவெளியில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். இரவு உணவை தவிர்த்தால் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும். அவ்வாறு செய்வதன் மூலம் ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்க நேரிடலாம். ஆனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்காது. 

எந்த அளவுக்கு உணவு உண்பதை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு உடல் எடை குறையும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், தேவையான நேரத்தில் சாப்பிடுவதும்தான் எடை குறைவதற்கு வழிவகுக்குமே தவிர இரவு உணவு தவிர்ப்பதால் அது நடக்காது. மேலும், இரவு உணவை தவிர்த்தால் பசிதான் அதிகரிக்கும். அதன் காரணமாக காலையில் எழுந்தவுடன் வழக்கத்தைவிட கூடுதலாக உணவை சாப்பிட்டுவிடுவீர்கள். அது உடலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுத்துவிடும்.

Hungry

சாப்பிடாமல் தூங்குவது உடலுக்கு சக்தி வழங்கும் 'ஸ்டெமினாவை' குறைக்கும். காலையில் உணவு உட்கொள்வது நீண்ட நேரம் உடலுக்கு வலிமையை கொடுக்கும். ஆனால் இரவு உணவை தவிர்த்தால் இரவு முழுவதும் உடல் சோர்வடைவதற்கு வழிவகுக்கும். இரவிலும் உடலுக்கு ஆற்றல் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | காலையில் டீ-உடன் முட்டை சாப்பிடலாமா? எச்சரிக்கை

இரவில் சாப்பிட விருப்பம் இல்லாதபட்சத்திலும் கூட பிடித்தமான உணவை குறைந்த அளவாவது சாப்பிட வேண்டும். இரவு உணவைத் தவிர்ப்பது உடலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏனென்றால் இரவு நேரத்தில்தான் அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடல் உறிஞ்சும். அவை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் வயிறு ஒருபோதும் வெறுமையாக இருப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

மேலும் படிக்க | இந்த 5 பயிற்சிகள் செய்தால் மோசமான உடல்வலியும் பறந்து போகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News