சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்..

Leg Exercises : பலருக்கு, அவர்களின் தொடை சதை அதிகமாக இருப்பது அவர்களின் உடல் குறித்த பாதுகாப்பின்மையை தூண்டி விட்டு விடும். இதை சரிசெய்ய சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 5, 2024, 04:54 PM IST
  • பெரிய தசை இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?
  • அவர்களுக்கான உடற்பயிற்சி
  • இதை காலை அல்லது மாலையில் செய்யலாம்
சதையுடன் இருக்கும் தொடையை குச்சி போல ஒல்லியாக்கலாம்! ‘இதை’ செய்யுங்கள்.. title=

Leg Exercises : நம் அனைவருக்குமே, உடல் எடை குறித்தும், உடல் பருமன் குறித்தும் கவலை இருக்கும். இப்படி இருந்தால், நாம் அழகாக இருக்க மாட்டோம் என சிலர் நினைப்பதுண்டு. ஆனால் அது உண்மையில்லை, மெல்லிய தேகமோ, பருமனான தேகமோ, நாம் நமது உடல் நலனில் கவனம் செலுத்தி, நோய் நொடியின்றி அதை பார்த்துக்காெண்டாலே எந்த பிரச்சனையும் வராது என மருத்துவர்கள் கூறுகின்றனர். உடல் எடை ஓரளவிற்கு குண்டாக இல்லை என்றாலும், தொடை சதை மட்டும் ஒரு சிலருக்கு பெரிதாக இருக்கும். இதை குறைப்பதற்கென்றே சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

ஸ்குவாட்ஸ்:

ஸ்குவாட் உடற்பயிற்சி, கால்கள் மற்றும் பின் தொடைகளுக்கு நன்றாக வலுக்கொடுக்கும் உடற்பயிற்சிகளுள் ஒன்றாகும். இந்த உடற்பயிற்சி தசைகளை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. க்ளூட்ஸ், தொடை எலும்புகள் என கால் பகுதிகளை குறைக்க இந்த உடற்பயிற்சிகளை செய்யலாம். தொடை தசைகளை ஒல்லியாக்க, இந்த உடற்பயிற்சியை தினமும் காலையில் எழுந்து செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

எப்படி செய்வது?
>காலை அகட்டி நிற்க வேண்டும்.
>உங்கள் உடலை நன்றாக ஒரு நாற்காலியில் உட்காருவது போல வளைக்க வேண்டும்.
>எதையும் பிடிக்காமல் அப்படியே எழுந்து நிற்க வேண்டும். 
>இப்படி, 10 முதல் 30 முறை வரை செய்யலாம். 

லஞ்சஸ்:

தொடை சதையை குறைக்க, இன்னுமொரு அற்புதமான உடற்பயிற்சிகளுள் ஒன்று, Lunges. இதுவும் தொடை சதை, தொடை எலும்புகள், மற்றும் பின் தொசைகளை குறைப்பதில் கவனம் செலுத்துகிறது. 

இதை எப்படி செய்வது?

>தரையில் இரு கால்களையும் அகல விரித்து நிற்க வேண்டும்.
>ஒரு காலை முன்னால் வைத்து இன்னொரு கால் முட்டியை மடக்கி அமர்ந்து எழுந்து கொள்ள வேண்டும்.
>அதே போல இன்னொரு கால் முட்டியையும் செய்ய வேண்டும். 
>இதை 10 முதல் 15 முறை வரை செய்யலாம். 

காஃப் ரைசஸ்:

கணுக்கால் மூலமாக செய்யும் உடற்பயிற்சிக்கு பெயர்தான், Calf Rises. இதை செய்தால், கண்டிப்பாக மெல்லிய தொடைகளை பெறலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ அறிக்கையில், இந்த உடற்பயிற்சியை செய்வதால் கால் தசைகளுக்கு நல்ல பலன் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. 

எப்படி செய்ய வேண்டும்?

>தரையில் கால்களை அகல விரித்துக்கொண்டு நிற்க வேண்டும்.
>உங்கள் நுணிக்காலில் எக்கி நிற்கவேண்டும். முடிந்தளவு மேல் நோக்கி நிற்கவும்.
>அப்படியே சில வினாடிகள் நின்று பின்னர் சாதாரணமாக நிற்கவும்.

மேலும் படிக்க | சம்மரில் எடை குறைக்க இந்த சூப்பர் பானங்கள் உதவும்: குடிச்சு பாருங்க!!

லெக் ரைசஸ்:

கால்களை தூக்கி இறக்குவதுதான் Leg Raises. இந்த உடற்பயிற்சி செய்வதால் தொடை தசை, பின்னங்கால் தசை என அனைத்தும் குறையும் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள். தொடையில் ஏற்படும் வலிகளை கூட, இந்த உடற்பயிற்சி போக்கி விடுமாம். 

எப்படி செய்ய வேண்டும்?

>தரையில் நேராக நிமிர்ந்து படுக்கவும்.
>ஒருகாலை உங்கள் மேல் உடலை தூக்காமல் எதையும் பிடிக்காமல் அப்படியே தூக்க வேண்டும்.
>அந்த காலை நேராக பிடித்த பிறகு அப்படியே மெதுவாக இரக்க வேண்டும்.
>இதே போல அடுத்த காலுக்கும் செய்ய வேண்டும்.

சைக்கிள் ஓட்டுவது:

சைக்கிள் ஓட்டுவது, மிகவும் நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகும். இது குறித்து வெளில்யிடப்பட்டிருக்கும் ஒரு மருத்துவ அறிக்கையில், ஒட்டுமொத்த உடற் கொழுப்பையும் குறைப்பதற்கும் சைக்கிள் ஓட்டலாம். தொடையில் இருக்கும் அதிக தசைகளை குறைக்க, கண்டிப்பாக நாம் தினமும் 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக காலை அல்லது மாலை வேளைகளில் சைக்கிள் ஓட்டலாமாம். 

மேலும் படிக்க | வயிற்று உப்புசம்: வயிற்றில் வாயு பிரச்சனையாகிவிட்டதா? வீட்டு மருத்துவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News