காலையில கடனை கழிக்கலையா? வெறும் வயித்தில இதை குடிச்சா பிரச்சனை தீர்ந்திடும்.....

Tips To Get Rid Of Constipation: மலச்சிக்கல் உண்டாக உணவே காரணமாக இருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள், இலகுவாக மலம் மூலம் வெளியேறாமல் இருந்தால், இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பார்க்கலாமே?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2024, 09:54 PM IST
  • உடலின் கழிவுகளை வெளியேற்ற சுலப வழி
  • மலச்சிக்கலுக்கு சிக்கல் கொடுக்கும் சியா விதைகள்
  • மலச்சிக்கலை ஓட ஓட விரட்டும் எலுமிச்சை தேன்
காலையில கடனை கழிக்கலையா? வெறும் வயித்தில இதை குடிச்சா பிரச்சனை தீர்ந்திடும்..... title=

மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் அது நமது நிம்மதியையே கெடுத்துவிடும். தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக மக்கள் பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனைகளில் மலச்சிக்கல் பிரச்சனையும் முக்கியமான ஒன்று. மலச்சிக்கல் காரணமாக மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. காலையில் வயிறு காலியாகாவிட்டால், அபான வாயு பிரிவது, வயிற்று உப்புசம், வயிற்று வலி என பலபிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும்.

மலச்சிக்கல் நீண்ட காலம் நீடித்தால், பல கடுமையான நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். மலச்சிக்கலை போக்க, பல்வேறு வகையான தந்திரங்களை மேற்கொள்வதும், பல மருந்துகளை உட்கொள்வதுமாக மலச்சிக்கலை சரி செய்ய முயல்கின்றனர். ஆனால் அவற்றை தொடர்ந்து உட்கொள்ளும் வரை மட்டுமே அவை வேலை செய்யும்.

எனவே, சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் மலச்சிக்கலை குணப்படுத்துவது எப்படி என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள். மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடக்கூடிய சுலபமான வீட்டு வைத்தியம் இது.

மலச்சிக்கலை போக்க இந்த 2 பொருட்களை தண்ணீரில் கலந்து குடிக்கவும்
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட, காலையில் வெறும் வயிற்றில் சியா விதைகள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரை அருந்தலாம். இது ஒரு சிறந்த டிடாக்ஸ் பானமாகும், குடலில் குவிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். சியா விதைகளில் கரையாத நார்ச்சத்து உள்ளது, இது மலத்தை மென்மையாக்க உதவுகிறது.

மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்...

குடல் இயக்கத்திற்கு உதவும் சியா விதையுடன் வைட்டமின் சி ஏராளமாக உள்ள எலுமிச்சை சேர்ந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எலுமிச்சை சாற்றில் ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையுடன் சியா விதைகளை சேர்த்து தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

எப்படி உட்கொள்ள வேண்டும்?
மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்க, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை சேர்த்து சுமார் 10-15 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பிறகு ஒரு எலுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்கவும். தேவைப்பட்டால், அதில் சிறிது தேனையும் சேர்க்கலாம்.

இந்த டீடாக்ஸ் பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இது குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக வயிறு எளிதில் சுத்தம் செய்யப்படுகிறது. எலுமிச்சையுடன் சேர்க்கப்பட்ட சியா விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.

மலச்சிக்கல் ஏற்பட்டால், சியா விதைகள் மற்றும் எலுமிச்சையை தண்ணீரில் கலந்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். என்றாலும், நீண்ட காலமாக மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகி வைத்தியம் பார்க்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு- இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதை ஒரு சுகாதார நிபுணரின் கருத்தாக கருத வேண்டாம். உடல் நலம் தொடர்பான எந்த  பிரச்சனைகளுக்கும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | இந்த செய்தியைப் படித்தால்... ஒட்டகப்பால் எங்கே கிடைக்கும் என தேடிச் செல்வீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News