சென்னை - நாகர்கோயில் வழித்தடத்தில் சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்... முழு விபரம் இதோ..!!

Chennai - Nagercoil Summer Special Vande Bharat Express: ஏப்ரல் 2024 கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2024, 12:17 PM IST
  • பயணிகளுக்கு இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்.
  • கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை.
  • சிறப்பு வந்தே பாரத் சேவை நிறுத்தங்கள்.
சென்னை - நாகர்கோயில் வழித்தடத்தில் சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்... முழு விபரம் இதோ..!! title=

Chennai - Nagercoil Summer Special Vande Bharat Express: இந்திய ரயில்வே, கோடை விடுமுறையில் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கோடைக்கால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை ஏப்ரல் மாதம் இயக்க உள்ளது. தங்கள் சொந்த ஊர் அல்லது சுற்றுலா தலங்களுக்குச் செல்லத் திட்டமிடும் பயணிகளின் வசதிக்காக 2014 ஏப்ரல் மாதத்தில் கோடைகால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை

ஏப்ரல் 2024 கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு, 5, 6, 7, 12, 13, 14, 19, 20, 21, 26, 27 மற்றும் ஏப்ரல் 28 ஆகிய தேதிகளில் கோடை சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

சிறப்பு வந்தே பாரத் சேவை விபரம்

ரயில் எண் 06057, சென்னை எழும்பூரில் இருந்து காலை 5:15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:10 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். மறு மார்க்கமாக, ரயில் எண் 06058 நாகர்கோவிலில் இருந்து மதியம் 2:50 மணிக்கு புறப்பட்டு, இரவு 11:45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும்.

மேலும் படிக்க | சென்னை - நெல்லை இடையே கோடை சிறப்பு ரயில்... தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!

சிறப்பு வந்தே பாரத் சேவை நிறுத்தங்கள்

சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் இந்த வந்தே பாரத் கோடை சிறப்பு ரயில்கள் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் நிறுத்தப்படும். தற்போது ஏப்ரல் மாதத்தில் கூடுதல் சேவை வழங்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த சேவை நீட்டிக்கப்படலாம் என இந்திய ரயிவே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பயணிகளுக்கு இந்திய ரயில்வே  வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்

ஏப்ரல் 2024  காலத்திற்கான கோடைகால சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதுப்பிக்கப்பட்ட அட்டவணை மற்றும் நிறுத்தங்களுக்கான அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்க்கவும், டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்யவும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

விடுமுறை காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை

பொதுவாகவே விடுமுறை மற்றும் பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இந்திய ரயில்வே ஒவ்வொரு ஆண்டும் முழு முன்பதிவு அடிப்படையிலான சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில், இந்திய இரயில்வே தீபாவளி மற்றும் நவராத்திரி கால கட்டத்திலும் 283 பண்டிகை சிறப்பு ரயில்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவை

தீபாவளி, நவராத்திரி, ஓணம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஓணம் பண்டிகையின் போது கேரளாவிற்கு வரும் பயணிகளின் வசதிக்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் சேவைகளை கொண்டு வந்தது, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போதும் கூடுதலாக பல வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டன.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சூப்பர் திட்டங்கள்... Super App... வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்... இன்னும் பல..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News