குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன்

3 Viruses Attack a Man: உலகில் முதன்முறையாக மூன்று கொடூர வைரஸ்கள் ஒருவரை தாக்கியுள்ளது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 25, 2022, 08:01 AM IST
  • உலகில் முதன்முறையாக ஒருவரை மூன்று கொடூர வைரஸ்கள் தாக்கியுள்ளது
  • ஸ்பெயினுக்கு பயணம் மேற்கொண்ட இத்தாலியருக்கு வைரஸ்களால் பாதிப்பு
  • குரங்கம்மை கொரோனா மற்றும் எச்ஐவியால் பாதிப்பு
குரங்கம்மை எச்ஐவி கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன் title=

3 Virusus Attack a Man: உலகில் முதன்முறையாக மூன்று கொடூர வைரஸ்கள் ஒருவரை தாக்கியுள்ளது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்பெயினில் இருந்து திரும்பிய இத்தாலியர் ஒருவருக்கு 9 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி மற்றும் உடலில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இத்தாலிய ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இந்த வழக்கு, உலகில் இதுவரை பதிவாகாத வைரல் தாக்குக்தல் சம்பவம் ஆகும். ஸ்பெயினுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று திரும்பிய இத்தாலியர் தொடர்பான செய்திகள் தற்போது செய்திகளில் தலைப்புச் செய்தியை பிடித்துள்ளது.

குரங்கு அம்மை,எச்ஐவி, கொரோனா என பல வைரஸ்களால் தாக்கப்பட்ட உலகின் முதல் மனிதன் தொடர்பாக ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷனில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 36 வயதான இத்தாலியர், ஸ்பெயினுக்கு சென்று திரும்பிய பிறகு, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இடுப்பில் வீக்கம் என பல உடல் உபாதைகளை அனுபவித்தார்.

மேலும் படிக்க | மனிதனிடம் இருந்து விலங்குகளுக்கு பரவும் குரங்கம்மை நோய்

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சில மணிநேரங்களில், அவரது இடது கையில் ஒரு சொறி தோன்றியது, பின்னர் அவரது உடலில் கொப்புளங்கள் தோன்றின. சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நகரமான கேடானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட், எய்ட்ஸ் மற்றும் குரஙம்மை என மூன்று நோய்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.இந்த மூன்று நோய்களுக்கும் காரணமான வைரஸ் ஒருவரையே அதுவும் ஒரே நேரத்தில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தியிருப்பது பல கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | வட கொரியாவில் யாருக்குமே காய்ச்சல் இல்லை! இதென்ன புதுக்கதை?

இதுவரை இப்படி பல வைரஸ்களால் ஒருவர் தாக்கப்படும் செய்திகள் எதுவும் இல்லை என்பதால், இத்தாலிய நோயாளி மீது உலகின் கவனம் திரும்ப்யிருக்கிறது.

இவருக்கு எந்தவித சிகிச்சை அளிப்பது, ஒரு நோய்க்கு கொடுக்கும் சிகிச்சைக்கான மருந்து மாத்திரைகள், மற்றொரு நோயில் எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது போன்ற பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படும். அனைத்திலும் மிகவும் முக்கியமாக, ஒருவருக்கு பல விதமான வைரஸ்கள் ஒரே நேரத்தில் பாதிப்பு ஏற்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்தும்  முதல் வழக்கு என்பதால் இந்த நோயாளி உலக அளவில் கவனத்தைப் பெறுகிறார்.

மேலும் படிக்க | கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 27 சதவீதம் பேருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோயாளி டிஸ்சார்ஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News