நிர்மலாதேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்கலாம்: உயர்நீதிமன்ற கிளை!

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை ஆளுநர் நியமித்த சந்தானம் குழு விசாரிக்க தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது!

Last Updated : May 9, 2018, 12:51 PM IST
நிர்மலாதேவி விவகாரத்தை சந்தானம் குழு விசாரிக்கலாம்: உயர்நீதிமன்ற கிளை! title=

தவறான செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, கைது செய்யப்பட்டு அவரிடம், சி.பி.சி.ஐ.டி., மற்றும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் நியமித்த சந்தானம் கமிஷன் சார்பில் தனித்தனியாக விசாரணை நடக்கிறது. 

இந்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு துணைபோன முருகன், கருப்பசாமி ஆகிய மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுதொடர்பாக செல்வகோமதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சந்தானம் கமிஷனின் விசாரணை மறுக்கப்பட வேண்டும் என்று ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தது. 

அப்போது, பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் குழுவை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தை ஆளுநர் நியமித்த சந்தானம் குழு விசாரிக்க தடையில்லை எனக் கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர். 

Trending News