பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி... இனி வரம்பற்ற டேட்டா கிடையாது - இந்த பிளானில்!

Shocking For BSNL Users: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் குறிப்பிட்ட பிளானில் இதுவரை வழங்கப்பட்டு வந்த வரம்பற்ற டேட்டா இப்போது நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Mar 10, 2024, 05:55 PM IST
  • இந்த திட்டம் 84 நாள்கள் வேலிடிட்டி உடையதாகும்.
  • தினமும் இந்த பிளானில் 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.
  • வரம்பற்ற காலிங் வசதியும் உள்ளது.
பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி... இனி வரம்பற்ற டேட்டா கிடையாது - இந்த பிளானில்! title=

Shocking For BSNL Users: ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனம் இந்தியாவில் தொலைத்தொடர்பு  துறையில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன எனலாம். வளர்ந்து தொழில்நுட்பங்களுக்கு ஏற்பவும் அனைத்து தரப்பிலான வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்றவாறு பல ரீசார்ஜ் திட்டங்களையும் இந்நிறுவனங்கள் வைத்துள்ளன. 

பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அதிர்ச்சி 

இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள்தான் 5ஜி இணைய சேவையை நாடு முழுவதும் வழங்கிவருகின்றன. இந்நிறுவனங்களுக்கு பின் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் வோடபோன் - ஐடியா நிறுவனம் இதுவரை 5ஜி சேவையை அறிமுகப்படுத்தவில்லை. 4ஜி இணைய சேவையைதான் வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. இதுஒருபுறம் இருக்க பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையையே இன்னும் கொண்டுவரவில்லை. 

இருப்பினும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை பல்வேறு வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக பலன்களை தரும் ரீசார்ஜ் திட்டங்களை தருகிறது. எனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் சாமானியர்களுக்கானது என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது. இந்நிலையில், அதன் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு அதிர்ச்சியை அளித்துள்ளது. zeenews.india.com/tamil/technology/bsnl-rs151-recharge-plan-30-days-validity-40-gb-data-benefits-483285

மேலும் படிக்க | Voter ID Transfer: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் திருமணதிற்கு பின் மாற்றுவது எப்படி?

டேட்டா சேவை நிறுத்தம் 

குறிப்பாக, அந்த நிறுவனம் இதுவரை வழங்கி வந்த இரவு முழுவதும் வரம்பற்ற டேட்டா சேவை என்பது குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது, பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கவலை அளித்துள்ளது. பிஎஸ்எனஎல் நிறுவனத்தின் ரூ.599 ரீசார்ஜ் திட்டத்தில்தான் ஜியோ இந்த சேவையை நிறுத்தி உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம் 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நடந்துள்ளது. இந்த திட்டத்தின் அனுகூலமே, குறைந்த விலையில் அதிக டேட்டாவை பயன்படுத்தலாம் என்பதுதான். 

பகல் மற்றும் இரவு என நாள் முழுவதும் இந்த பிளானில் வாடிக்கையாளர்களுக்கு இணைய சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் இதனை அதிகம் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பால் அவர்கள் ஏமாற்றமடைவார்கள் எனலாம்.

பிஎஸ்என்எல் ரூ.599 ரீசார்ஜ் திட்டம்

இந்த திட்டத்திற்கு 84 நாள்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தினமும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 84 நாள்கள் வேலிடிட்டியில் மொத்தம் 252ஜிபி டேட்டா வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். தினந்தோறும் டேட்டா லிமிட் முடிந்ததும் இணைய வேகம் 40Kbps ஆக குறையும். இந்த திட்டத்தில் வரம்பற்ற வாய்ஸ் காலிங் உள்ளது. மேலும், 100 இலவச எஸ்எம்எஸ் தினமும் வழங்கப்படுகிறது. 

Zing, PRBT, Astrocell ஆகியவை கூடுதல் நன்மையாக வழங்கப்படுகிறது. முன்னர் இந்த திட்டத்தில் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இணைய சேவை வழங்கப்பட்டது. ஆனால், இந்த சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Instagram போஸ்ட்களை ஒரே நேரத்தில் மொத்தமாக நீக்குவது எப்படி? இதோ வழிகாட்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News