ஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை... மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டா - முழு விவரம்

Bike Sales In India April 2024: நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருச்சக்கர வாகனங்களின் விற்பனை நிலவரத்தை இங்கு விரிவாக காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : May 11, 2024, 05:02 PM IST
  • ஆறு நிறுவனங்கள் இந்தியாவில் பைக் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன.
  • ஹீரோ நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
  • ஹோண்டா இந்தாண்டு அதிக பைக்குகளை விற்பனை செய்துள்ளது.
ஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை... மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டா - முழு விவரம்  title=

Bike Sales In India April 2024: ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் எது உயருகிறதோ இல்லையோ வெயிலின் தாக்கம் மட்டும் அதிகரித்துகொண்டே இருக்கிறது. இந்த ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்டும் என்பதால் மக்கள் அனைவரும் குளிர் பிரதேசங்களுக்கும், நீர்நிலைகளுக்கும் சுற்றுலாவுக்காக படையெடுப்பார்கள். தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், ஒகேனக்கல், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும். 

இந்த சூழலில் பெரும்பாலனோர் கார் மற்றும் பைக் போன்ற வாகனங்களை வாங்க மாட்டார்கள். இருப்பினும், அந்த நிலைமை தற்போது பெரிதும் மாறியுள்ளது எனலாம். கோடை சீசன், பள்ளி விடுமுறை சீசன் என்றில்லாமல் வாகனங்களின் தேவை என்பது இந்திய சமூகத்தில் அதிகரித்துவிட்டது என்பதையே கார் மற்றும் பைக் போன்ற பொதுமக்கள் அதிக பயன்படுத்தும் வாகனங்களின் விற்பனை உயர்வு காட்டுகிறது எனலாம். 

ஆறு நிறுவனங்களின் விற்பனை நிலவரம்

அந்த வகையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் விற்பனையாகி உள்ள இருச்சக்கர வாகனங்கள் குறித்த தரவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்மூலம் எந்தெந்த மாடல் பைக்குகள் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் எவ்வளவு விற்பனையானது, இந்தாண்டு மார்ச் மாதத்தில் எவ்வளவு விற்பனையானது ஆகியவற்றையும் ஒப்பீடு செய்து 2024 ஏப்ரல் மாதத்தின் விற்பனை உயர்ந்துள்ளதா, வீழ்ச்சியடைந்துள்ளதா என்பதை காணலாம். வழக்கம்போல் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, சுசுகி மற்றும் ராயல் என்பீல்ட் ஆகிய நிறுவனங்களே விற்பனையில் முன்னணியில் உள்ளன, அவற்றின் விற்பனை விவரத்தைதான் இங்கு விரிவாக காண உள்ளோம்.

மேலும் படிக்க | iVOOMi JeetX ZE : 170 கிமீ தூரம் ஜாலியா டிரிப் அடிக்கலாம்! மார்கெட்டுக்கு வரப்போகும் இ-ஸ்கூட்டர்

இந்தாண்டு ஏப்ரலில் விற்பனை உயர்வு

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தின் விற்பனை என்பது கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையை விடவும், 2024ஆம் ஆண்டு மார்ச் மாத விற்பனையை விடவும் அதிகம் விற்பனையாகி உள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 16 லட்சத்து 75 ஆயிரத்து 846 இருச்சக்கர வாகன யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது, கடந்த 2024 மார்ச் மாதத்தில் 14 லட்சத்து 13 ஆயிரத்து 152 யூனிட்களே விற்பனையான நிலையில் இம்மாம்த 18.59% விற்பனை உயர்ந்துள்ளது. 

அதேபோல், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 12 லட்சத்து 75 ஆயிரத்து 397 யூனிட்களே விற்பனை. அந்த வகையில், அதை ஒப்பிடும்போது இந்தாண்டு சுமார் 31.40% சதவீதம் பைக் விற்பனை அதிகமாகியுள்ளதை காணமுடிகிறது. அதாவது, கடந்தாண்டு ஏப்ரல் மாத விற்பனையை விட இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 4 லட்சத்து 449 யூனிட்கள் அதிகம் விற்பனையாகி உள்ளன. 

எப்போதும் டாப்பில் ஹீரோ...

வழக்கம்போல் இம்மாத மொத்த விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே அதிக யூனிட்களை விற்பனை செய்துள்ளது. அதாவது , மொத்த விற்பனையான 16 லட்சத்து 75 ஆயிரத்து 846 யூனிட்களில், ஹீரோ நிறுவனம் மட்டும் 5 லட்சத்து 13 ஆயிரத்து 296 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, மொத்த விற்பனையில் ஹீரோ நிறுவனத்தின் பங்களிப்பு மட்டும் 30.63% ஆகும். ஹீரோ கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்தாண்டு ஏப்ரலில் 31.91 சதவீதமும், இந்தாண்டு மார்ச் மாதத்தை விட 11.77 சதவீதமும் விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது. 

ஹோண்டாவின் அசுர விற்பனை...

அதேபோல் ஹாண்டா மொத்த விற்பனையில் இரண்டாம் இடம் பிடிக்கிறது. அதாவது, இந்தாண்டு ஏப்ரலில் 4  லட்சத்து 81 ஆயிரத்து 46 யூனிட்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. மொத்த விற்பனையில் 28.70 சதவீதம் ஆகும். இது கடந்தாண்டு ஏப்ரலை விட 42.20 சதவீதமும், இந்தாண்டு மார்ச் மாதத்தை விட 34.31 சதவீதமும் அதிகமாகும். 

தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் டிவிஎஸ் 3 லட்சத்து ஆயிரத்து 449 யூனிட்களையும், பஜாஜ் 2 லட்சத்து 16 ஆயிரத்து 950 யூனிட்களையும், சுசுகி 88 ஆயிரத்து 67 யூனிட்களையும், ராயல் என்பீல்ட் 75 ஆயிரத்து 38 யூனிட்களையும் விற்பனை செய்துள்ளன. மேலும் மொத்த விற்பனையில் டிவிஸ் 17.99%, பஜாத் 12.95%, சுசுகி 5.26%, ராயல் என்பீல்ட் 4.48% என்ற சதவீதத்தில் பங்களித்துள்ளன. இந்த 4 நிறுவனங்களும் கடந்தாண்டு ஏப்ரலை விடவும், இந்தாண்டு மார்ச் மாதத்தை விடவும் அதிகம் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருச்சக்கர வாகன ஏற்றுமதியிலும் இந்த 6 நிறுவனங்கள் அதிகம் விற்பனை செய்துள்ளன.

மேலும் படிக்க | நெக்ஸான் சிஎன்ஜி vs மாருதி பிரெஸ்ஸா : விலை, மைலேஜ் என எந்த கார் பெஸ்ட் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News