பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம்

Discount For Mini Fridges In Amazon Sale 2024: நீங்கள் 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மினி பிரிட்ஜ் வாங்க திட்டமிட்டிருந்தால் அமேசானில் கிடைக்கும் இந்த 3 பிரிட்ஜ்களை வாங்கலாம்.

Written by - Sudharsan G | Last Updated : May 13, 2024, 04:04 PM IST
  • அமேசானில் இந்த பிரிட்ஜ்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
  • LG, Haier, Godrej ஆகிய பிராண்டட் பிரிட்ஜ்கள் தள்ளுபடியில் கிடைக்கிறது.
  • மினி பிரட்ஜ்கள் பேச்சிலர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
பேச்சிலர்களுக்கு இனி குஷிதான்... கம்மி விலையில் மினி பிரிட்ஜ்கள் - எல்லாத்தையும் கூலா குடிக்கலாம் title=

Discount For Mini Fridges In Amazon Sale 2024: கோடை காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தேவை இருக்கும். அதில் முதன்மையானது என்னவென்றால் வெயிலின் கொடுமையான தாக்கத்தில் இருந்து தப்பிப்பது. மே மாதத்தில்தான் எப்போதும் கத்திரி வெயில் தொடங்கும் என்றாலும் மார்ச் மாதத்தில் இருந்து கத்திரி வெயிலை போன்ற தாக்கம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாடு முழுவதும் பல இடங்களில் பார்க்க முடிந்தது. 

அப்போவே அப்படி என்றால் இந்த மே மாதத்தை சொல்லவா வேண்டும். முன்பெல்லாம் சிறுவர்கள் இளைஞர்கள் அதிகாலை வெளிச்சத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினால் 9, 9.30 மணிவரை விளையாடுவார்கள், ஆனால் இப்போதெல்லாம் 8 மணிக்கே வீடு திரும்பிவிடுகிறார்கள். அந்தளவிற்கு காலை 8 மணிக்கு உச்ச வெயில் போல கடுமையான வெப்பத்தை உணர முடிகிறது.

எனவே, வீட்டிற்கு ஏசி, ஃபேன், ஏர் கூலர், பிரிட்ஜ் ஆகியவற்றை வாங்க வேண்டும் என அனைவரும் இப்போதுதான் அதிகம் நினைப்பார்கள். இந்த வெயிலில் இருந்து இவையெல்லாம் தப்பிக்கவைக்கும் என்பதால் இந்த சீசனிலேயே இதையெல்லாம் வாங்கிவிட வேண்டும் என்பது திட்டமாக இருக்கும். ஆனால், அதே சமயம் குடும்பமாக இல்லாமல் தனியாக வசிப்பவர்களுக்கோ அல்லது பேச்சிலராக இருப்பவர்களுக்கோ இவற்றை வாங்குவது என்பது பட்ஜெட்டுக்கு கட்டுப்படி ஆகாது. 

மேலும் படிக்க | ஏப்ரலில் உச்சம் தொட்ட பைக் விற்பனை... மாஸ் காட்டிய ஹீரோ, ஹோண்டா - முழு விவரம்

எனவே, அவர்கள் பழைய ஏசி, பிரிட்ஜ்களை வாங்கும் முனைப்பில் இருப்பார்கள். அதேபோல், பேச்சிலர்களுக்கும் தனியாக இருப்பவர்களுக்கும் பிரிட்ஜ் என்று எடுத்துக்கொண்டால் பெரியளவிற்கு இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. மினி பிரிட்ஜ்களே அவர்களின் தேவைக்கு சிறந்தது எனலாம். அதுவும் ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரத்திலேயே கிடைத்துவிடும். 

அந்த வகையில் அமேசானில் அதிரடி தள்ளுபடி கிடைக்கும் சிறந்த 3 மினி பிரிட்ஜ்கள் குறித்து இங்கு காணலாம். அமேசானில் கிடைக்கும் இந்த மினி பிரிட்ஜ்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இதில் நீங்கள் குடிக்க தண்ணீர், ஜூஸ் போன்றவற்றை மட்டுமல்ல காய்கறி, உணவு பொருள்கள் வரை அனைத்தையும் வைத்துக்கொள்ளலாம், நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 

Haier 42L

இந்த மினி பிரிட்ஜ் 42 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஒற்றை கதவு இருக்கும். இந்த பிரிட்ஜுக்கு 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரேட்டிங் மின்சார சிக்னத்தின் அளவீடாகும். அதாவது இந்த பிரிட்ஜை நாள் முழுவதும் இயக்கினாலும் மின்சார கட்டணம் குறைவாகவே வரும். 

இந்த மினி பிரிட்ஜ் அமேசானில் 30 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. அதன் அசல் விலை 13,490 ரூபாய் ஆகும். தள்ளுபடியுடன் இதன் விலை 9,490 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை நீங்கள் மாதாமாதம் 460 ரூபாய் செலுத்தியும் வாங்கலாம். 

Godrej 30 L

இந்த பிரிட்ஜின் அம்சங்கள் என்று பார்த்தால் இதில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது ஒற்றை கதவு கொண்டது. இந்த மினி பிரிட்ஜை அமேசானில் இருந்து 7,790 ரூபாய்க்கு வாங்கலாம். இது தவிர, ஹெச்டிபிசி வங்கி அட்டை மூலம் இதற்கு 1500 ரூபாய் தனி தள்ளுபடி சலுகை கிடைக்கும். மேலும் மாதாமாதம் 378 ரூபாய் தவணை செலுத்தி இந்த பிரிட்ஜை வாங்கலாம். 

LG 43 L

இந்த பிரிட்ஜ் 43 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதில் ஒற்றை கதவு உள்ளது. மேலும் இந்த பிரிட்ஜ் 1 ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றிருக்கிறது. அமேசானில் இந்த மினி பிரிட்ஜை 9,990 ரூபாய்க்கு வாங்கலாம். இந்த பிரிட்ஜை 484 ரூபாய் மாதத் தவணைக் கொடுத்தும் வாங்கலாம். 

மேலும் படிக்க | டாடா பஞ்ச் டூ மாருதி பலேனோ : அதிகம் விற்பனையான டாப் 10 கார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News