குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை!

Murder In Front Of Family: மனைவி மற்றும் குழந்தை கண் முன் ரவுடி ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது... 

Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 07:52 AM IST
குடும்பத்தினர் முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி! சென்னையில் பரபரப்புக் கொலை! title=

சென்னை: சென்னையில் முன்னாள் ரவுடியை, மனைவி மற்றும் குழந்தை கண் முன் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலுக்கு காவல்துறையினர் வலைவீச்சு...

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் 27 வயதாகும் கௌதம், இவர் தனது மனைவி பிரியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டில் மனைவி மட்டும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த கௌதமை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டி சாய்த்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கௌதமனின் மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர் பிரதத்தை கைப்பற்றி பிண கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மற்றும் குழந்தையின் கண்ணெதிரே நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ராமஜெயம் கொலையாளிகளுக்கு ஜெயக்குமார் கொலையில் தொடர்பு?

இந்தக் கொலை தொடர்பாக காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கௌதம் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர் மீது கொலை உட்பட சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்த கௌதமனின் மனைவி பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரணுக்கும், கௌதமிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்தக் கொலை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்

மேலும் படிக்க | துபாய் அன்லாக்ட் வெளியிட்ட பாகிஸ்தானின் பணக்கார முகம்! வயிறெரியும் நாட்டு மக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News