இந்தியா ரொம்ப குதிக்காதீங்க.. 2 நாள்ல கச்சேரி இருக்கு: தென்னாப்பிரிக்கா வீரர் சவால்

இந்திய மண்ணில் இந்திய அணியை நாங்கள் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறோம் என்பதால், அந்த அணியின் சவாலை எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம் என தென்னாப்பிரிக்க வீரர் ராஸி வாண்டர் துசென் கூறியுள்ளார்.    

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 3, 2023, 08:48 AM IST
  • தென்னாப்பிரிக்காவுடன் மோதும் இந்தியா
  • இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை
  • சவாலுக்கு தயார் என வாண்டர் துசென் அறிவிப்பு
இந்தியா ரொம்ப குதிக்காதீங்க.. 2 நாள்ல கச்சேரி இருக்கு: தென்னாப்பிரிக்கா வீரர் சவால் title=

நடப்பு உலக கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணிகளாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இரு அணிகளும் இருக்கின்றன. ஒரு பக்கம் இந்திய அணி எதிரணிகளை அடித்து துவம்சம் செய்கிறது என்றால், மற்றொரு பக்கம் கருணையே இல்லாமல் அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இதனால் புள்ளிப் பட்டியலில் இரு அணிகள் தான் டாப். முதல் இரண்டு இடங்களில் இந்தியா, தென்னாப்பிரிக்கா தான் இருக்கின்றன. இந்த இரு அணிகளும் இன்னும் 2 நாட்களில் மோத இருக்கின்றன.

மேலும் படிக்க | அப்போ சச்சின்... இப்போ விராட் - இது 2003 ஸ்கிரிப்ட் ஆச்சே - அப்போ இந்தியாவுக்கு கப் இல்லையா...!

அதாவது நவம்பர் 5 ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த போட்டி தான் உலக கோப்பை மினி அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. இந்த இரு அணிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையை வான்கடேவில் நசுக்கிய களிப்போடு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கொல்கத்தா புறப்படுகிறது. அங்கு ஏற்கனவே போட்டிக்கு காத்துக் கொண்டிருக்கும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இது குறித்து பேசியிருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரர் ராஸி வாண்டர் துசென், இந்தியாவை, இந்திய மண்ணில் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறோம் என்பதால் நாங்கள் அவர்களின் சவாலை எதிர்நோக்கியிருக்கும் என பேட்டியில் பேசியிருக்கிறார். 

இந்திய அணியுடனான மோதல் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், " நாங்கள் இந்தியாவை, இந்திய மண்ணில் ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறோம். அதனால் அவர்களை எங்களால் நிச்சயம் வீழ்த்த முடியும். பலமான அணியாக இந்தியா இருக்கலாம். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என தரமான அணியாக இருந்தாலும், அவர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள். அவர்களின் சவாலை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்கா அணி தயாராகவே இருக்கிறது" என தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா அணியைப் பொறுத்தவரை நெதர்லாந்து அணியிடம் மட்டும் எதிர்பாராமல் தோல்வியை தழுவியது. அதன்பிறகு எழுச்சி கண்டு 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியை பற்றி கூறினால், தோல்வி வாசம் எட்டிப் பார்க்காத ஒரு அணி. வெற்றியுடன் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? என்பது தான் இப்போது பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

மேலும் படிக்க | ஒரே போட்டியில் சச்சின் சாதனையை ஊதி தள்ளிய விராட்.. இன்னும் லிஸ்ட் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News