காதலுக்கு செட்டாகாத ராசிகள் இவை! கல்யாணம் கைகூடாத துரதிருஷ்டசாலி ராசிக்காரர்கள்!

Love Unlucky horoscope: ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது. திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 16, 2024, 04:53 PM IST
  • காதலுக்கு செட்டாகாத ராசிக்காரர்கள்
  • திருமணத்தை முடிவு செய்ய தயங்கும் ராசியினர்
  • தனிமையில் இனிமை காணும் ராசி எது?
காதலுக்கு செட்டாகாத ராசிகள் இவை! கல்யாணம் கைகூடாத துரதிருஷ்டசாலி ராசிக்காரர்கள்! title=

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமானது. பொதுவாக அனைவரும் திருமணம் தொடர்பான கனவுகளை காண்பது வழக்கம். சிலருக்கோ, திருமணம் என்ற வார்த்தையே பயத்தைக் கொடுக்கும். சிலருக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்களில் ஆசை இருந்தாலும் அதிர்ஷ்டம் கை கொடுக்காது. பணம், காசு, பதவி, படிப்பு என அனைத்தும் இருந்தும் திருமணம் ஆகாதவர்கள், அதற்கான காரணம் புரியாமல் தவிப்பார்கள்.

ஜாதகத்தை தூக்கிக் கொண்டு ஜோதிடர்களை நோக்கி படையெடுப்பார்கள். எத்தனை வரன் பார்த்தாலும் திருமணம் மட்டும் தள்ளிக் கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அவரவர் ஜாதகத்தில் இருக்கும் என்றாலும், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு திருமணம் என்பது நடப்பதற்கான வாய்ப்புகள் சற்று குறைவு என கருதப்படுகிறது. திருமணத்திற்கான வாய்ப்பு குறைவாக உள்ள சில ராசிக்காரர்களைப் பற்றி இன்று நாம் தெரிந்துக் கொள்வோம்.

ஒவ்வொரு ராசியின் அடிப்படையிலும் அவர்களின் எதிர்காலத்தை ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.  ஒவ்வொருவரின் ஜாதகமும், தலைவிதியும் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டதாக இருக்கும். வாழ்க்கையில் காதல் கல்யாணத்திற்காக ஏங்கினாலும் காதல் எட்டிக்காயாக கசக்கும் சில ராசிகள் இவை...  

மேலும் படிக்க | கிருத்திகையில் குரு பெயர்ச்சி... ஜாக்பாட் பலன்களை பெறும் ‘4’ ராசிகள் இவை தான்..!!

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்க்கை அமைந்தாலும், அதில் முழு திருப்தி இருக்காது. தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி உறுதியாகச் சொல்ல முடியாமல் அடிக்கடி முடிவுகளை மாற்றிக் கொள்வார்கள். வாழ்க்கைத் துணையைப் பற்றிய அவர்களின் விருப்பங்களும் விருப்பங்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதே மனநிலையில் இருப்பதால், யாரைத் திருமணம் செய்துக் கொள்வது என்பதைத் தேர்ந்தெடுப்பதில் அதிக தயக்கம் காட்டுவார்கள். இதனால் இவர்களது திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்கள் கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டார்கள், தங்களுடைய விருப்பத்தின்படியே நடக்க விரும்புவார்கள்.. கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகளை விரும்ப மாட்டார்கள். அதனால் முடிந்தவரை திருமணத்தைத் தவிர்ப்பார்கள் என்பதால் இவர்களது திருமணம் தாமதமாகிறது.

தனுசு: தனுசு ராசிக்காரர்கள், தனிமையில் இருக்க விரும்புவார்கள். அவர்கள் ஒரு உறவை உருவாக்கினால், அது முறிந்துவிடுமோ என்று பயப்படுவார்கள். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது தொடர்பான் எண்ணமும் அவர்களின் திருமணத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் தங்களுக்குள்ளுயே மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்கள் துணையக்கூட தங்கள் மகிழ்ச்சிக்குள் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். குறைவாகப் பேசும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் விருப்பப்படி வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் தனித்து வாழ முடிவு செய்வதற்கு தயங்குவதில்லை.

மீனம்: மீன ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிவதில்லை என்பதால், இவர்களின் வாழ்க்கை துணைக்கான தேடல் நீண்ட நாட்கள் தொடரும். இதனால் இவர்களது திருமணம் தாமதமாகிறது.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, புகழ்... இந்த ராசிகளுக்கு சனி அருளால் சகலமும் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News