கும்ப ராசியில் உருவான அபூர்வ யோகம்..! 3 ராசிகளுக்கு மெகா ஜாக்பாட்

Trigrahi Yoga in Aquarius: கும்ப ராசியில் திரிகிரஹி யோகம் உருவாகயிருப்பதால் மூன்று ராசிகளுக்கு இப்போது ஒளிமயமான நாட்கள் தொடங்கியுள்ளது. பணவரவு, பொருளாதாரம் எல்லாம் மேம்படப்போகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2024, 06:43 AM IST
  • கும்பத்தில் 3 ராசிகளின் அபூர்வ சேர்க்கை
  • திரிகிரஹி யோகம் உருவாகப்போகிறது
  • மகரம் உள்ளிட்ட ராசிகளுக்கு இனி நல்ல காலம்
கும்ப ராசியில் உருவான அபூர்வ யோகம்..! 3 ராசிகளுக்கு மெகா ஜாக்பாட் title=

Auspicious Trigrahi Yoga in Aquarius: ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு கிரக மாற்றத்துக்கும் ஒவ்வொரு பலன்கள் கிடைக்கும் நிலையில், இப்போது கும்பத்தில் அபூர்வ யோகம் ஒன்று உருவாகயிருக்கிறது. சனி ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கும் நிலையில், மார்ச் 7 ஆம் தேதி, சுக்கிரனும் கும்ப ராசியில் சஞ்சரித்துள்ளார். செவ்வாயும் மார்ச் 15ல் கும்ப ராசியில் பிரவேசிப்பதால் அபூர்வ திரிகிரஹி யோகத்தை உண்டாகப்போகிறது. கும்ப ராசியில் இப்போது 3 கிரகங்கள் சங்கமிக்க உள்ளதால் திரிகிரஹி யோகம் உருவாக உள்ளது. இந்த அபூர்வ யோகத்தால் எந்த 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு செவ்வாய், சுக்கிரன், சனி இணைவது மிகவும் பலன் தரும். இந்த சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும். தொழில் செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசமாக இருக்கும். எங்கே முதலீடு செய்தாலும் லாபம் கிடைக்கும். தொழிலிலும் வெற்றி பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் அடையலாம். 

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், லாபம் அதிகரிக்கும்

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கும் செவ்வாய், சுக்கிரன், சனி சேர்க்கை சாதகமாக அமையும். ரிஷபம் ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் பாக்கியம் பெறப் போகிறார்கள். எடுக்கும் எந்த வேலையிலும் வெற்றி பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் புதிய வேலையைத் தொடங்க இந்த நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். உறவும் சிறப்பாக இருக்கும். கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகள் தரப்பிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.

மகரம்

மகர ராசியினருக்கு செவ்வாய், சுக்கிரன் மற்றும் சனியின் சேர்க்கை பல மகிழ்ச்சியைத் தரும். வாழ்க்கையில் வரும் அனைத்து பிரச்சனைகளும் இந்த நேரத்தில் நீங்கும். கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.

மேலும் படிக்க | இன்னும் 49 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ராஜராஜ வாழ்க்கை ஆரம்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News