நாள் முழுவதும் கணினியில் வேலையா... கண்களை காக்கும் ‘சூப்பர்’ உணவுகள் டயட்டில் இருக்கட்டும்!

கண் பாதுகாப்பு: வயது ஆக ஆக, கண்களும் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த இண்டெநெட் யுகத்தில், கண் பார்வை கோளாறுகள் பொதுவாகி விட்டன,. இதனை தவிர்க்க சில குறிப்பிட்ட உணவுகளை நிச்சயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் அதிக டிவி அல்லது லேப்டாப் பயன்படுத்துதல், சில சமயங்களில் மொபைலில் ஈடுபடுவது, புத்தகங்கள் படிப்பது போன்றவற்றாலும் கண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு கண்பார்வை குறைய ஆரம்பிக்கிறது.

 

1 /7

இண்டெநெட் யுகத்தில், கண் பார்வை கோளாறுகள் பொதுவாகி விட்டன. அதோடு  உடலில் பல ஊட்டச்சத்துக்கள் குறைவதாலும் பார்வைக் குறைபாடும் ஏற்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், கண்களில் கண்ணாடி அணிய வேண்டிய நிலை அதிக ஏற்பட்டு வருகிறது. இயற்கையாகவே கண்பார்வையை அதிகரிக்க உணவில் மாற்றங்களைச் செய்வது நல்லது. கண்பார்வையை அதிகரிப்பதில் நல்ல பலனைக் காட்டும் அத்தகைய சில உணவுகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

2 /7

வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, தாதுக்கள், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து கீரையில் உள்ளன. இதை உட்கொள்வதன் மூலம், உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் கிடைக்கும். கீரையை உட்கொள்வதால், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, கண்பார்வையை கூர்மையாக்குவதில் நன்மை பயக்கும். 

3 /7

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் மற்றும் பால் பொருட்கள் அதாவது பாலில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களையும் சாப்பிடலாம். இதில் நல்ல அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ கார்னியாவைப் பாதுகாக்கிறது மற்றும் துத்தநாகம் இரவு பார்வையை மேம்படுத்துகிறது.

4 /7

நட்ஸ் அல்லது உலர் பழங்களில் உள்ள ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின் ஈ கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது தவிர வயதின் காரணமாக வலுவிழந்து வரும் கண்களை வலுப்படுத்த வைட்டமின் ஈ உதவுகிறது.

5 /7

முட்டை சூப்பர்ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. அமினோ அமிலங்கள், நீரில் கரையக்கூடிய மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய பி வைட்டமின்கள் இவற்றில் காணப்படுகின்றன. முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், அது கண்களின் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.

6 /7

கேரட் கண்களுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை. கேரட்டில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது உடல் வைட்டமின் ஏ தயாரிக்க உதவுகிறது. வைட்டமின் ஏ கண்பார்வையை கூர்மைப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் ஏ இரவில் பார்க்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. 

7 /7

பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.