யம்மாடி இத்தனை கெட்டப்களா? வீர தீர சூரன் படத்தில் விக்ரம் கலக்கல்

Chiyaan Vikram Veera Dheera Sooran : வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மொத்த எவ்வளவு கெட்டபில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 29, 2024, 01:53 PM IST
  • எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ படத்தில் விக்ரம் நடிக்கிறார்.
  • ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
  • வீர தீர சூரன் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
யம்மாடி இத்தனை கெட்டப்களா? வீர தீர சூரன் படத்தில் விக்ரம் கலக்கல் title=

Chiyaan Vikram Veera Dheera Sooran Movie Update: வீர தீர சூரன் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மொத்த எவ்வளவு கெட்டபில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் காண்போம்.

நடிகர் சீயான் விக்ரம்:
தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்களுள் ஒருவர் விக்ரம். கடின உழைப்பு, விடா முயற்சி, கதைகளை தேர்ந்தெடுத்தல் போன்ற பல விஷயங்களால் பிற ஹீரோக்களை விட இவர் தனித்து காணப்படுகிறார். பல்வேறு கஷ்டங்கள், மற்றும் வேதனைகளை கடந்து தான் இந்த நிலைக்கு வந்தார். இவர் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு டப்பிங் கலைஞராக சினிமாவில் தன்னுடைய பணியை துவங்கினார். இதை தொடந்து, கடந்த 1990 ஆம் ஆண்டு 'என் காதல் கண்மணி' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 1991ல் ‘தந்து விட்டேன் என்னை’ படத்தில் நடித்தார், அதன்பிறகு எஸ். பி. முத்துராமன் அவர்களின் படமான ‘காவல் கீதம்’ (1992) மற்றும் பி. சி. ஸ்ரீராம் அவர்களின் படமான ‘மீரா’ (1992) போன்ற படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. அதன் பின்னர், இரண்டாண்டுகள் தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் பிஸியாக இருந்த அவர், 1994 ஆம் ஆண்டில் ‘புதிய மன்னர்கள்’ என்ற படம் மூலமாக மீண்டும் தமிழுக்கு வந்தார். அப்படம், எதிர்பார்த்த வெற்றியைத் தராததால், மீண்டும் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடிக்கத் தொடர்ந்தார். 1997 ஆம் ஆண்டில், ‘உல்லாசம்’ என்ற படத்தில், அஜீத்குமாருடன் இணைந்து நடித்தார். 

மேலும் படிக்க | குட் பேட் அக்லி பற்றிய புதிய அப்டேட்.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட்

சேது மூலம் ஹிட்டான விக்ரம்:
இதனிடையே கடந்த 1999 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் 'சேது' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரிஸ்க் எடுத்து இந்த படத்தில் நடித்தது மட்டும் இன்றி, இப்படத்தின் வெற்றி விக்ரமை மற்றொரு தளத்திற்கு கொண்டு சென்றது. இதன் பிறகு இவர் நடித்த அனைத்து படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 

பொன்னியின் செல்வன் 2 படம்:
கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 படம் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமாக வெளியான இந்தப் படத்தில் வழக்கம்போல தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் விக்ரம்.

தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம்:
நடிகர் விக்ரமின் தங்கலான் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமின் வீர தீர சூரன்:
இதனிடையே தற்போது இவர் இயக்குநர் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் ‘வீர தீர சூரன்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்முடன் எஸ்ஜே சூர்யா, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். மேலும் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு, பிரசன்னா படத்தொகுப்பு செய்கின்றனர். இந்தப் படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் கடந்த ஆண்டிலேயே வெளியான நிலையில், கடந்த 17ம் தேதி விக்ரம் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டது. 

வீர தீர சூரன் படத்தின் அப்டேட்:
இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் தென் தமிழகத்தில் தொடங்கிய நிலையில், தற்போது இந்த படத்தில் விக்ரம் மூன்று விதமான கெட்டப்களில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மேலும் படிக்க | வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News