இந்த வாரம் ஜீ தமிழில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் - ரேட்டிங் எவ்வளவு? இதோ விவரம்

Zee Tamil Serials: இந்த வாரத்திற்கான சீரியல் ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2024, 03:19 PM IST
  • தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமான ஒன்று ஜீ தமிழ்.
  • இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
  • ஜீ தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த வாரம் ஜீ தமிழில் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் - ரேட்டிங் எவ்வளவு? இதோ விவரம்  title=

Zee Tamil Serials: தமிழ் சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் முக்கியமான ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் சீரியல்களின் ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஜீ தமிழில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

1. கார்த்திகை தீபம் : 

ஆனந்திற்கு ஆபத்து அதற்காக அவரது மனைவி பரிகாரம் செய்ய வேண்டும் என்று ரியாவை சிக்க வைத்து கோவிலில் பரிகாரம் செய்ய தீபாவின் அதிரடி பிளான் போன்ற காட்சிகளுடன் ஒளிபரப்பாகிய கார்த்திகை தீபம் சீரியல் 4.66 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. 

2. அண்ணா : 

ஸ்கூல் நிகழ்ச்சியின் ஷண்முகம் தலைமை தாங்க சௌந்தரபாண்டி அதுக்கு போட்டியாக கபடி போட்டி நடத்த ஷண்முகம் கலந்து கொள்ள இருந்த நிலையில் அண்ணனுக்காக வீரா பங்கேற்று வெற்றியை சூடிய கதையாக ஒளிபரப்பாகிய அண்ணா சீரியல் 4.04 என்ற ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | Rasavathi Review : அர்ஜுன் தாஸிற்கு ராசியாக அமைந்ததா ‘ரசவாதி’? இந்த விமர்சனத்தில் தெரிஞ்சிக்கோங்க..

3. சந்தியா ராகம் : 

மாயாவை மீண்டும் வெளிநாட்டுக்கு அனுப்ப ஷாரு செய்த சதி, மாயாவின் காதலை அறிந்த சீனு என எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிய சந்தியா ராகம் சீரியல் 3.97 என்ற ரேட்டிங்குடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. 

4. நினைத்தேன் வந்தாய் : 

சுடரை கடத்தி வேலு கல்யாணம் செய்ய போக எழில் அதை கடைசி நொடியில் தடுத்து அஞ்சலிக்காக அவளை வீட்டிற்கு அழைத்து சென்ற கதையாக ஒளிபரப்பாகிய நினைத்தேன் வந்தாய் சீரியல் 3.33 ரேட்டிங் புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. 

5. நினைத்தாலே இனிக்கும் : 

ஷில்பாவின் ஆவியை கிணற்றுள் அடைக்க நடக்கும் பூஜை, சித்தார்த் மாலையை கழட்டுவது போன்ற கதைக்களத்துடன் ஒளிபரப்பாகிய நினைத்தாலே இனிக்கும் சீரியல் 3.13 என்ற ரேடிங்குடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் படிக்க | Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News