Good Bad Ugly படத்திலும் இவர்தான் கதாநாயகி! அஜித்துக்கு ரொம்ப ராசியானவர் ஆச்சே..

Good Bad Ugly Heroine : நடிகர் அஜித் நடிக்க இருக்கும் Good Bad Ugly படத்தின் கதாநாயகி யார் என்பது குறித்த விவரம் வெளியாகியிருக்கிறது. அவர் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 11, 2024, 05:36 PM IST
  • குட் பேட் அக்லி படத்தின் அப்டேட்
  • அஜித்திற்கு ஜோடியாகும் நாயகி
  • அவருக்கு ரொம்ப ராசியானவர்
Good Bad Ugly படத்திலும் இவர்தான் கதாநாயகி! அஜித்துக்கு ரொம்ப ராசியானவர் ஆச்சே.. title=

Good Bad Ugly Heroine : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம், Good Bad Ugly. இந்த படத்தில் நடிகர் அஜித் குமார் ஹீரோவாக நடிப்பதை தொடர்ந்து இப்படம் குறித்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. 

Good Bad Ugly திரைப்படம்:

தமிழ் சினிமாவில் தற்போது வரும் இயக்குநர்கள் பலர், தாங்கள் இயக்கும் படங்களில் யாருக்கு fanஆக இருக்கிறார்களோ, அவர்களையே வைத்து படம் இயக்குகின்றனர். கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தை இயக்கியதை போல, ஆதிக் ரவிச்சந்திரனும் தனக்கு பிடித்த நடிகர் அஜித்தை வைத்து Good Bad Ugly என்ற படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து, இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

விடாமுயற்சியில் அஜித்..

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் குறித்த அறிவிப்பு, கடந்த ஆண்டு வெளியானது. இப்படத்தில் அஜித் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் Good Bad Ugly படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு வருகிறார். விடாமுயற்சி திரைப்படமும், Good Bad Ugly திரைப்படமும் இந்த வருடத்திற்குள்ளாகவே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அஜித்துக்கு ராசியான கதாநாயகி..!

தமிழ் திரையுலகில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக டாப் நாயகியாக இருப்பவர், த்ரிஷா. அஜித்துடன் அதிகமுறை ஜோடி சேர்ந்து நடித்த ஒரே நடிகை இவர்தான். கிரீடம், ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் கைக்கோர்த்த இந்த ஜோடி, விடாமுயற்சி படத்திலும் ஒன்று சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்பாேது Good Bad Ugly திரைப்படத்திலும் இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து இவர்கள் இருவரும் இரண்டு படங்களில் சேர்ந்து நடிப்பது இதுவே முதல் முறையாகும். 

மேலும் படிக்க | அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

ராசியான நாயகி..

நடிகை த்ரிஷா, கடந்த ஆண்டு முதலே தொடர்ந்து படங்களில் சைன் செய்து வருகிறார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வரும் இவர், அஜித்திற்கு ராசியான கதாநாயகியாகவும் இருக்கிறார். காரணம், இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட் அடித்திருக்கின்றன. ஆனால் இதில் ஒரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால், தாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் ஒன்றில் கூட, இவரும் ஜோடி சேர்ந்ததில்லை. 

Trisha

மியூசிக் யார்? 

Good Bad Ugly திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வீரம் திரைப்படத்தை அடுத்து, இரண்டாவது முறையாக இவர் அஜித்துடன் கைக்காேர்க்க இருக்கிறார். அந்த படத்தின் பாடல்கள் போல, இதுவும் ஹிட் அடிக்கும் என கூறப்படுகிறது. 

மார்க் ஆண்டனி படத்தை இயக்கி வெற்றி பெற்றிருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன், அதற்கடுத்து இயக்கும் படம், குட் பேட் அக்லீதான். அந்த படத்தின் வெற்றியால் இவர் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் ரசிகர்கள், இந்த படத்தையும் வெற்றிப்படமாக்குவார் என்ற எதிர்பார்ப்புடன் ரிலீஸ் குறித்த அறிவிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். நடிகர் அஜித்தும், ஒரு பக்கம் ஷூட்டிங், ஒரு பக்கம் தனது பைக் பயணம் என்று ஜாலியாக தனது வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகிறார். 

மேலும் படிக்க | நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் என்ன தெரியுமா? படிக்கிற பையன் போல..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News