குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 23, 2024, 03:03 PM IST
  • அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி.
  • இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனிற்கான ப்ரோமோ.
  • குக் வித் கோமாளி சீசன் 5 எப்போது துவங்குகிறது?
குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள் title=

Cooku With Comali 5 Latest News Tamil : மக்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சிகளுள் ஒன்று தான், குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது புத்தம் புது பொலிவுடன் இன்னும் நான்கு நாட்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் கோமாளிகள் குறித்த லிஸ்ட் தற்போது வெளியாகி வருகிறது. 

குக் வித் கோமாளி 5 | Cooku With Comali 5 :
கடந்த சில ஆண்டுகளாக, தொலைக்காட்சி சேனல்களுள் மக்களின் அதிக கவனத்தை ஈர்த்த சேனலாக இருக்கிறது, தளபதி நடிகரின் பெயரை கொண்ட அந்த சேனல். இதில், சூப்பர் ஹிட் ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தன. ஆனால், நாட்கள் உருண்டோட, அந்த நிகழ்ச்சிகளும் முடிந்து விட்டன. தற்போதுள்ள நிகழ்ச்சிகள், முன்னர் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் அளவிற்கு பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம், மக்களின் மனநிலை மாற்றம் என்று கூறலாம். மக்களால், தற்போது அதிகம் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, குக் வித் கோமாளி. 

இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனிற்கான ப்ரோமோ, சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் வழக்கம் போல செஃப் தாமுதான் ஜட்ஜ் ஆக வருகிறார். இவருடன் இணை நடுவராக இருக்க வேண்டிய செஃப் வெங்கடேஷ் பட், இந்த போட்டியில் இருந்து விலகியிருக்கிறார். இதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை. இதையடுத்து, நடிகரும் சமையல் கலை நிபுணருமான மதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது நடுவராக இந்த நிகழ்ச்சியில் வர இருக்கிறார். 

குக் வித் கோமாளி சீசன் 5 எப்போது துவங்குகிறது:
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் குக் வித் கோமாளி சீசன் 5, நிகழ்ச்சி ஏப்ரல் 27 முதல் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் இரவு 9.30 என்று ஒளிபரப்பாகும் என்று அறிவிப்பு ஒன்று புதிய வீடியோ மூலம் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது, மேலும் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

குக் வித் கோமாளி: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்:
இந்நிலையில் சற்று முன் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கோமாளிகளின் முழு விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, புகழ், சுனிதா, குரேஷி, சரத் போன்ற பழைய கோமாளிகள் இருந்தாலும், அவர்களுடன் சேர்ந்து காமெடி கலாட்டா செய்ய கேமி, அன்ஷிதா, வினோத், ஷப்னம், நாஞ்சில் விஜயன், ‘என்னம்மா’ ராமர் போன்ற புது கோமாளிகளை களமிறக்கி உள்ளனர். இதனால் இந்த சீசன் ஃபன் ஓவர்லோடடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | கில்லி விஜய்யின் தாய் அவரை விட வயதில் சின்னவர்! எத்தனை வயது வித்தியாசம் தெரியுமா?

குக் வித கோமாளி சீசன் 5 போட்டியாளர்கள் லிஸ்ட்:
இதனிடையே குக்குகளாக நடிகை திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் நடிகர் வசந்த், நடிகை ஷாலின் சோயா மற்றும் சமையல் கலைஞர் கிருஷ்ணா மெக்கன்ஸி உள்ளிட்ட எட்டு போட்டியாளர்களை இடம்பெற்றுள்ளனர் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள Deadpool & Wolverine படத்தின் ட்ரைலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News