கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..

Korean Hacks For Glass Skin : பல கொரிய பெண்களுக்கு சருமம் கண்ணாடி போல இருக்கும். இது போன்ற சருமம் உங்களுக்கும் வேண்டுமா? அப்போ அதுக்கு நீங்க செய்ய வேண்டியது இதுதான்.  

Written by - Yuvashree | Last Updated : May 15, 2024, 07:29 PM IST
  • கொரியன் ஸ்கின் கேர்
  • கண்ணாடி போன்ற சருமம்
  • காலையில் செய்ய வேண்டியவை
கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க.. title=

Korean Hacks For Glass Skin : இந்தியாவில், கொரிய கலாச்சாரம் மிக மெதுவாக ஊடுருவ ஆரம்பித்து, இப்போது பெரிய அளவில் ஃபேஷன் ட்ரெண்டாகவே மாற ஆரம்பித்து விட்டது. கொரியாவில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் தங்களின் சருமத்தை பத்திரமாக பாதுகாத்து, வெயிலில் கருப்படைய விடாமல் என்னென்னவோ செய்து தங்களது சருமத்தை பராமரித்து வருகின்றனர். இவர்கள் வெந்நிறமாக இருப்பதற்கு அவர்களது நாடு இருக்கும் கால சூழ்நிலை காரணம் என்றாலும், இதற்கென்று இவர்கள் மேற்கொள்ளும் ‘ஸ்கின் கேர்’ ராெட்டீனும் கவனிக்கக்கூடியதாகும். 

இந்தியாவில் BTS இசைக்குழுவிற்கு மட்டுமன்றி, கே டிராமா, குறிப்பிட்ட சில கொரிய நடிகர்-நடிகைகள் என பலருக்கும் ரசிகர் கூட்டம் அதிகமாக உள்ளது. ஒரு சிலர், தங்களின் படிப்பு முடிந்தவுடன் கொரியாவிற்கு குடி பெயர வேண்டும் என்ற எண்ணத்தில் கூட வளம் வந்து கொண்டிருக்கின்றனர். இப்படி, இவர்களுக்கு மிகவும் பிடித்த கொரிய பெண்களை போல, சருமம் பளபளக்க என்ன செய்ய வேண்டும்? இங்கு பார்ப்போம்.

முகத்தை ‘இந்த’ நீர் கொண்டு கழுவ வேண்டும்:

கொரிய பெண்கள் தங்களது சருமத்தை பாதுகாக்க, மிகவும் குளிர்ந்த நீரில் தங்கள் முககங்களை கழுவுகின்றனராம். இது, அவர்களின் சருமத்தை புத்துணர்ச்சி பெற உதவி செய்யும் என கூறப்படுகிறது. இதனால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. 

க்ளென்சர் பயன்பாடு:

காலையில் எழுந்தவுடன் ஒரு நல்ல க்ளென்சரை வைத்து நம் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்கின்றனர், கொரிய ஸ்கின் கேர் இன்ஃப்ளுவன்செர்கள். இது, நம் சருமத்தில் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும் போர்ஸ் (Pores) அழுக்குகளை அகற்றி, சருமத்தை சூப்பர் பொலிவாக மாற்றுகிறது. இதை தினமும் செய்து வந்தால் உங்களது டெட் ஸ்கின் செல்ஸ் முகத்தில் இருந்து நீங்கி, முகத்திற்கு புத்துணர்ச்சி தருவதாக கூறப்படுகிறது. 

மாய்ஸ்ட்ரைசர்:

உங்கள் முகத்தை க்ளென்ஸ் செய்த பிறகு, சருமம் நொடிப்பொழுதில் வறண்டு ட்ரை ஆகி விடுமாம். இதை பாலன்ஸ் செய்ய உங்கள் சருமத்திற்கு ஏற்ற நல்ல மாய்ஸ்ட்ரைசரை உபயோகிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். காலையில் மாய்ஸ்ட்ரைசர் தடவுவதால் உங்கள் முகம் வியற்காமலும் மேக்-அப் அலங்கோலமாக ஆகாமலும் இருக்க உதவுவதாக கூறப்படுகிறது. 

நீர்ச்சத்துக்கு..

முகத்தை ஈரப்பதமாகவும் நீர்ச்சத்து நிறைந்த்தாகவும் வைத்துக்கொள்ள சில பிரத்யேக பேட்கள் உள்ளன. இதில், முக சருமத்தை தூய்மையாக்கும் சில அத்தியாவசிய எண்ணெய்கள் இருக்கும். இதை முகத்தில் வைப்பதால் உங்கள் முக சருமம் உள்ளூர சரியாக்கப்பட்டு ஆரோக்கியமானதாக மாற்றப்படும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஜிம், டயட் எதுவும் தேவையில்லை... 21 நாளில் பருமன் குறைய ‘இதை’ கடைபிடிங்க போதும்..!!

சீரம்:

அனைத்து சருமத்திற்கும் ஏற்ற, சூப்பரான சீரம், கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கின்றன. உங்கள் சருமத்திற்கு எது ஏற்றுக்கொள்ளுமோ அதை வாங்கி தினமும் ஒரு சொட்டு எடுத்து முகத்தில் தேய்க்கவும். முதலில் அதை டேப் செய்து அனைத்து இடங்களிலும் பரவ விட்டு பின்னர் தேய்க்கலாம். இதனால் உங்கள் சருமம், உள்ளூர இருந்து அப்பழுக்கற்றதாக மாறுவதாக கூறப்படுகிறது. 

கண்களுக்கான க்ரீம்:

நம் கண்களுக்கு கீழ் இருக்கும் சருமம் மிகவும் மென்மையானதாக இருக்குமாம். எனவே, முகம் முழுவதும் இருக்கும் சருமத்தினை நாம் பாதுகாக்கும் போது கண்களுக்கு கீழ் இருக்கும் அந்த சருமத்தையும் பத்திரமாக பராமரிக்க வேண்டும் என்கின்றனர் தோல் மருத்துவர்கள். கண்களுக்கு கீழ் இருக்கும் கரு வலையங்களை அகற்ற, அந்த இடத்தை பொலிவாக்க சில க்ரீம்கள் இருக்கின்றன. அல்லது இயற்கையான முறையிலும் இந்த கருவளையங்களை அகற்றலாம். கிரீம்கள் அதிகமாக உபயாேகித்தால் collagen அதிகமாக இல்லாத கிரீம்களை முகத்தில் தேய்க்கவும். 

சன் ஸ்கிரீன்:

வெயிலில் சென்றாலும், வீட்டிலேயே இருந்தாலும் நாம் சூரியனின் பிடியில் இருந்து நம் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் உபயோகிப்பது மிகவும் முக்கியமாகும். இது, சருமத்தில் அழுக்கு, டேன் ஏற்படுவதை தடுப்பதாக கூறப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வெண்டைக்காய் நல்லது தான்... ஆனால் இந்த 5 பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News